06 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
நாட்டின் 06 மாவட்டங்களுக்கு கடும் வெப்பநிலைக்குறிய மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இயற்கைப் பேரிடர் முன் எச்சரிக்கை மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில், நாளை (31) பகல் நேரத்தில் வெப்பம் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.
இதற்கமைய கிழக்கு மாகாணம் பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கே மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
இந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் நீரேற்றத்துடன் இருக்கவும், கடினமான வெளிப்புறச் செயல்பாடுகளைத் தவிர்க்கவும், முடிந்தவரை நிழலை நாடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வெளிப்புறப் பணிகளில் ஈடுபடுவோர் நிழலான இடங்களில் அடிக்கடி ஓய்வெடுக்குமாறும், உட்புறப் பணிகளில் ஈடுபடுவோர் முதியவர்கள் மற்றும் நோயாளிகளைக் கவனித்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வாகன ஓட்டிகள் குழந்தைகளை வாகனங்களுக்குள் கவனிக்காமல் விட்டுச் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்க, பொதுமக்கள் இலகுவான, வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.




