மே 17 இயக்கத்துடனும் தமிழ்த் தேசியப் பேரவையினர் சென்னையில் பேச்சு
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள், தமிழகத்தின் பிரபல தமிழ்த் தேசிய அமைப்பான ‘மே 17 இயக்கத்தின்’ ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் அந்த இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடினர். இந்த விசேட சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை தமிழகத் தலைநகர் சென்னையில் இடம்பெற்றது. இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சமகால அரசியல் நெருக்கடிகள், சர்வதேச மட்டத்திலான மனித உரிமைப் போராட்டங்கள் மற்றும் தாயக – தமிழகத் தமிழர்களுக்கிடையிலான […]













