ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும் என்று எச்சரித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான்மீது தொடுக்கப்பட்டுள்ள போருக்கு அமெரிக்க பொதுமக்கள் எதிரானவர்கள் அல்லர் என சுட்டிக்காட்டியுள்ளார்.  உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்கர்கள் போரை எதிர்க்கவில்லை: ஈரான்மீதான தாக்குதல் தொடரும்

  • July 22, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும் என்று எச்சரித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான்மீது தொடுக்கப்பட்டுள்ள போருக்கு அமெரிக்க பொதுமக்கள் எதிரானவர்கள் அல்லர் என சுட்டிக்காட்டியுள்ளார். “அவர்கள் (ஈரான்) கடுமையான விலையைக் கொடுக்கப் போகிறார்கள், அவர்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு வருகிறார்கள்” எனவும் டிரம்ப் கூறினார். ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய போர் தொடர்பில் மக்கள் ஆதரவு குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு டிரம்ப் பதிலளிக்கையில், “உண்மையில், அமெரிக்கர்கள் இந்த போருக்கு எதிரானவர்கள் அல்லர் ” எனக் குறிப்பிட்டார். எனினும், கடந்த […]

ஐரோப்பா

இங்கிலாந்தில் கல்வி விசா மீதான தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

  • July 22, 2026
  • 0 Comments

ஆப்கானிஸ்தான், கேமரூன், மியான்மர் மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான கல்வி விசாக்களுக்கு  உள்துறை அமைச்சகம்  தடை விதித்துள்ள நிலையில், அந்த தடையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட்டுள்ளது. டங்கன் லூயிஸ் என்ற சட்ட நிறுவனத்தின் ஆதரவுடன் மூன்று சூடான் பெண்கள் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர். அத்துடன் குறித்த வழக்கு அடுத்த வாரத் தொடக்கத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. கல்வி விசாக்களை பயன்படுத்தி இங்கிலாந்திற்குள் நுழையும் சிலர் பின்னர் அங்கு புகலிடம் கோருவதாக கூறி கடந்த மார்ச் […]

ஈரான்மீது கடந்த ஜூன் 27 முதல்அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 3 குழந்தைகள் உட்பட குறைந்தபட்சம் 53 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உலகம் செய்தி

போர் மரண எண்ணிக்கையை இன்று வெளியிட்டது ஈரான்

  • July 22, 2026
  • 0 Comments

ஈரான்மீது கடந்த ஜூன் 27 முதல்அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 3 குழந்தைகள் உட்பட குறைந்தபட்சம் 53 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஈரான் சுகாதார அமைச்சு மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. அத்துடன், உட்கட்டமைப்புகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அதேவேளை, கடந்த பெப்ரவரி பிற்பகுதியில் போர் தொடங்கியதில் இருந்து, இதுவரை குறைந்தபட்சம் 18 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் . நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என்று அமெரிக்க மத்திய கட்டளைக் பீடம் (US Central Command) தெரிவித்துள்ளது.

உலகம்

தெஹ்ரான் கப்பல்களை குறிவைத்தால், அமெரிக்கா மின் கட்டமைப்புகளை குறிவைக்கும்

  • July 22, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் ஜலசந்தியில் தெஹ்ரான் கப்பல்களை குறிவைத்தால், அமெரிக்கா ஈரானின் பாலம் அல்லது மின் கட்டமைப்பு அமைப்பை  தாக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் தனது ட்ரூத் சோசியல் தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், “ஈரானிய இஸ்லாமியக் குடியரசு ஹோர்முஸ் ஜலசந்தியில் ஏவுகணை, ரொக்கெட், ட்ரோன் அல்லது வேறு எந்த சாதனம் அல்லது ஆயுதம் மூலமாக   கப்பலைத் தாக்கும் போதெல்லாம், அமெரிக்கா தெஹ்ரானுக்கு அருகில் அல்லது உள்ளே அமைந்துள்ள பாலம், மின்கட்டமைப்புகளை குண்டு […]

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றதை அமெரிக்காவில் மட்டும் சுமார் 6.3 கோடி (63 மில்லியன்) பேர் கண்டுகளித்துள்ளனர். செய்தி விளையாட்டு

சூப்பர் ஹிட் உலகக்கோப்பை: அமெரிக்காவில் புதிய சாதனை

  • July 22, 2026
  • 0 Comments

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றதை அமெரிக்காவில் மட்டும் சுமார் 6.3 கோடி (63 மில்லியன்) பேர் கண்டுகளித்துள்ளனர். இது முந்தைய பார்வைகளின் சாதனைகளைத் தகர்த்தெறிந்துள்ளதுடன், பல தசாப்த கால முயற்சிகளுக்குப் பிறகு அமெரிக்காவில் கால்பந்து விளையாட்டிற்கான வரவேற்பு எந்த அளவிற்குப் பெருகியுள்ளது என்பதையும் உணர்த்தியுள்ளது. நியூஜெர்சியில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் இரு அணிகளும் கோல் எதும் அடிக்காத நிலையில், கூடுதல் நேரத்தின் 106-வது நிமிடத்தில் ஸ்பெயின் முதல் […]

மெக்சிகோ கால்பந்து வரலாற்றின் மிகச்சிறந்த கோல்கீப்பர்களில் ஒருவராகக் கருதப்படும் கில்லர்மோ ஓச்சோவா (Guillermo Ochoa), தனது 22 ஆண்டுகால புகழ்பெற்ற தொழில்முறை கால்பந்து வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். செய்தி விளையாட்டு

மெக்சிகோ கால்பந்து ஜாம்பவான் ஓச்சோவாவின் 22 ஆண்டுகால பயணம் நிறைவு

  • July 22, 2026
  • 0 Comments

மெக்சிகோ கால்பந்து வரலாற்றின் மிகச்சிறந்த கோல்கீப்பர்களில் ஒருவராகக் கருதப்படும் கில்லர்மோ ஓச்சோவா (Guillermo Ochoa), தனது 22 ஆண்டுகால புகழ்பெற்ற தொழில்முறை கால்பந்து வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த வாரம் தனது 41-வது பிறந்தநாளைக் கொண்டாடிய ஓச்சோவா, 2026 FIFA உலகக்கோப்பைத் தொடரே தனது கடைசித் தொடராக இருக்கும் என முன்னரே கூறியிருந்தார். இருப்பினும், அவர் தனது விளையாட்டு வாழ்க்கையை நீட்டிப்பதற்காக ஏதேனும் புதிய கிளப் அணியில் இணைவாரா என்ற ஊகங்கள் […]

உலகம்

நெதர்லாந்தின் எராஸ்மஸ் பாலத்தில் நிகழ்ந்த விபத்து – 07 பேர் வைத்தியசாலையில்

  • July 22, 2026
  • 0 Comments

நெதர்லாந்தின் ரோட்டர்டாம் (Rotterdam) நகரில் இரண்டு டிராம்கள் மோதிக்கொண்டதில், 15 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று காலை எராஸ்மஸ் (Erasmus) பாலத்தில் இடம்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த பாலம் போக்குவரத்துக்காக மூடப்பட்டுள்ளது. சம்பவத்தை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள், ஒரு வான்வழி ஆம்புலன்ஸுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஏழு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். அவருக்கு  மருத்துவ உதவியாளர்கள் சம்பவ இடத்திலேயே சிகிச்சை […]

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பதனை ஏற்றுக்கொண்டு , சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவிடம் தாம் கோரிக்கையை முன் வைத்துள்ளதாக , வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி

சர்வதேச விசாரணையை வலியுறுத்திய வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்

  • July 22, 2026
  • 0 Comments

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பதனை ஏற்றுக்கொண்டு , சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவிடம் தாம் கோரிக்கையை முன் வைத்துள்ளதாக , வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூது குழுவினர் இன்றைய தினம் புதன்கிழமை செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட்டனர். அதன் போது , தூதுக்குழுவின் கவனத்தை ஈர்க்கும் முகமாக […]

ஐரோப்பா

ஸ்பெயின் மற்றும் பிரான்ஸில் காட்டுத்தீ அபாயம் – போராடும் தீயணைப்பு வீரர்கள்

  • July 22, 2026
  • 0 Comments

ஸ்பெயின் மற்றும் பிரான்சில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. தீயணைப்பு வீரர்கள் இன்றை தினம் சில பகுதிகளில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ளனர். இருப்பினும் பெரும்பாலான பகுதிகளில் தீவிபத்து அபாயம் அதிகமாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிரான்சின் தென்மேற்குப் பகுதியான ஜிரோண்டேவில் (Gironde) தீயணைப்பு வாகனம் தீப்பிடித்து எரிந்ததில், இரண்டு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பார்பிக்யூக்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் மக்களை வலியுறுத்தினர். மேலும், பத்தில் ஒன்பது காட்டுத்தீகள், தற்செயலாகவோ அல்லது திட்டமிட்டோ, […]

பிரிட்டிஷ் பாதுகாப்பு நிறுவனமான BAE சிஸ்டம்ஸ் மற்றும் உக்ரைனின் ஒரு முக்கிய பாதுகாப்பு கூட்டாளர் நிறுவனம், உக்ரைனில் இலகுரக பீரங்கி அமைப்புகளை உற்பத்தி செய்வதற்கான உரிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஐரோப்பா செய்தி

பிரிட்டிஷ் L119 பீரங்கி அமைப்புகளை உற்பத்தி செய்யப் போகும் உக்ரைன்

  • July 22, 2026
  • 0 Comments

பிரிட்டிஷ் பாதுகாப்பு நிறுவனமான BAE சிஸ்டம்ஸ் மற்றும் உக்ரைனின் ஒரு முக்கிய பாதுகாப்பு கூட்டாளர் நிறுவனம், உக்ரைனில் இலகுரக பீரங்கி அமைப்புகளை உற்பத்தி செய்வதற்கான உரிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. “உக்ரைன் ஆயுதப் படைகளின் பயன்பாட்டிற்காக எல்119 இலகுரக துப்பாக்கியின் ஒரு வகையை உருவாக்குவதற்கு இந்த மூலோபாய கூட்டாண்மை ஆதரவளிக்கும்,” என்று ஃபார்ன்பரோ சர்வதேச விமானக் கண்காட்சியைத் தொடர்ந்து BAE சிஸ்டம்ஸ் நிறுவனம் தெரிவித்தது. இந்த ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள உக்ரேனிய பாதுகாப்பு நிறுவனம் அடையாளம் காணப்படவில்லை. இந்த ஆவணம், […]