இலங்கை செய்தி

புதிய அரசமைப்பு: பரந்தப்பட்ட கலந்துரையாடல் அவசியம் என்கிறது ஐரோப்பிய ஒன்றியம்

புதிய அரசமைப்பு: பரந்தப்பட்ட கலந்துரையாடல் அவசியம் என்கிறது ஐரோப்பிய ஒன்றியம்

தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து இலங்கையிலிருந்து வெளியேறவு இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கர்மென் மொரேனோ (Carmen Moreno) , பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

தூதுவரை அன்புடன் வரவேற்ற பிரதமர், இலங்கை அண்மையில் முகங்கொடுத்த சவால்களின்போது ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய ஒத்துழைப்பிற்குத் தனது தெரிவித்தார்.

குறிப்பாக ‘டிட்வா’ சூறாவளி காரணமாக ஏற்பட்ட அனர்த்த சூழ்நிலையின்போதும், அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு மற்றும் மீட்சிப் பணிகளின்போதும் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய பங்களிப்பைப் பாராட்டினார்.

அதேபோன்று, திறந்த மனதுடனான உரையாடல்களை முன்னெடுப்பதற்கும், இரு தரப்பிற்கும் இடையில் ஆக்கபூர்வமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கும் தூதுவர் கர்மென் மொரேனோ லீ பதவிக் காலத்தில் வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஒத்துழைப்புகள் குறித்தும் பிரதமர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசாங்கம் எட்டியுள்ள முன்னேற்றங்கள் குறித்துத் தூதுவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தங்கள் தொடர்பாகப் பரந்தளவிலான கலந்துரையாடல்கள் மற்றும் ஆலோசனை நடைமுறைகளைப் பேணிச் செல்வதன் முக்கியத்துவத்தையும் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதற்கு மேலதிகமாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளுடன் இலங்கை பேணிவரும் உறவுகளை மேலும் பலப்படுத்திக்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்திய தூதுவர், பரஸ்பரம் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் பயனுள்ள முறையில் ஈடுபடுவதற்கும் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கும் இலங்கை காட்டிவரும் சாதகத் தன்மையையும் பாராட்டினார்.

இந்நிகழ்வில் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவின் பிரதித் தலைவர் காலியா அகிஷேவா (Galia Agisheva), பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிக்கா போகஹவத்த உள்ளிட்ட வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை