நெதர்லாந்தின் எராஸ்மஸ் பாலத்தில் நிகழ்ந்த விபத்து – 07 பேர் வைத்தியசாலையில்
நெதர்லாந்தின் ரோட்டர்டாம் (Rotterdam) நகரில் இரண்டு டிராம்கள் மோதிக்கொண்டதில், 15 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று காலை எராஸ்மஸ் (Erasmus) பாலத்தில் இடம்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த பாலம் போக்குவரத்துக்காக மூடப்பட்டுள்ளது.
சம்பவத்தை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள், ஒரு வான்வழி ஆம்புலன்ஸுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஏழு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். அவருக்கு மருத்துவ உதவியாளர்கள் சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளித்துள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.




