இந்தியா செய்தி தமிழ்நாடு

அண்ணாமலைக்கு தமிழகத்தில் வலுக்கிறது ஆதரவு!

பாஜகவில் இருந்து வெளியேறி தனிக்கட்சி ஆரம்பிக்கப்போவதாக அறிவித்துள்ள அண்ணாமலைக்கு தமிழகத்தில் ஆதரவு வலுத்துவருகின்றது.

கோவையில் அவரது ஆதரவாளர்களான பாஜகவின் மாவட்ட தலைவர்கள் உட்பட பலர் விலகியுள்ளனர்.

மற்றொரு தீவிர ஆதரவாளரான கோவை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சந்திரசேகரும் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

அத்துடன், தெற்கு மாவட்டத்தில் உள்ள 22 மண்டல் தலைவர்களில் 14 பேர் விலகிய நிலையில் அவர்களுடன், பொறுப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களும் விலகினர்.

அதேவேளை, டெல்லியில் இருந்து நேற்றிரவு சென்னை திரும்பிய அண்ணாமலையை வரவேற்க, விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள், தொண்டர்கள் திரண்டனர்.

அண்ணாமலைக்கு பூங்கொத்து வழங்கியும், வாழ்த்து முழக்கம் எழுப்பியும் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

தான் தொடங்கும் அரசியல் இயக்கத்தில் இணையுமாறு மக்களுக்கு அண்ணாமலை அழைப்பு விடுத்தார்.

இதற்காக, ‘இது நம்ம இயக்கம்’ தளத்தில் பதிவு செய்யுமாறும் கேட்டுக் கொண்டார். இவ்வாறு அவர் அறிவித்த 10 மணி நேரத்தில் 10 லட்சம் உறுப்பினர்கள் அவரது இயக்கத்தில் சேர பதிவு செய்துள்ளனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி