பைசா கோபுரத்தைபோல சாய்ந்த தேவாலயம்!! நிதி திரட்டும் மக்கள்!
பிரித்தானியாவின் – லிங்கன்ஷயரில் உள்ள புனித ஜேம்ஸ் தேவாலயம், கடுமையான கட்டமைப்புச் சிக்கல்கள் காரணமாக மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.
உலகப் பிரசித்தி பெற்ற பைசா கோபுரத்தைபோல இந்த தேவாலயத்தின் ஒருபகுதி வியத்தகு முறையில் சாய்ந்துள்ளதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் நிலை பாரம்பரியக் கட்டிடமாகப் பட்டியலிடப்பட்டுள்ள இதன் உட்புறம், அபாயகரமான தரைத்தளம், மரப்புழுப் பாதிப்பு மற்றும் விரிசல் விட்ட சுவர்களால் சேதமடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நிலமை மோசமடைந்தால் நிரந்தரமாக மூடப்படும் அபாயம் காணப்படுவதால், அவசரகால பழுதுபார்ப்பு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தேவாலயத்தை தற்காலிகமாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அவசரகால பழுதுபார்ப்புப் பணிகளுக்குத் தேவைப்படும் சுமார் £150,000 நிதியைத் திரட்ட, பங்கு மக்கள் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.




