அமெரிக்கர்களை பற்றிய எதிர்மறை விடயங்களை கோரிய ட்ரம்ப் நிர்வாகம்!!
கடந்த காலத்திலோ அல்லது நிகழ்காலத்திலோ அமெரிக்கர்கள் பற்றி எதிர்மறையாக கருதும் விடயங்கள் தொடர்பில் (எந்தவொரு காட்சிப் பொருள்களையும் அல்லது கண்காட்சிகளையும்) தெரியப்படுத்துமாறு ட்ரம்ப் நிர்வாகம் பூங்காக்களுக்கு வரும் பார்வையாளர்களிடம் கோரியுள்ளது.
இந்த சர்ச்சைக்குரிய கோரிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
சுமார் 35000 மக்களின் கருத்துக்களை அசோசியேட்டட் பிரஸ் ஆய்வு செய்ததில், பெரும்பாலான மக்கள் இந்த முயற்சியை விமர்சித்துள்ளமை தெரியவந்துள்ளது.
பதிலளித்தவர்களில் வடகரோலினாவை சேர்ந்த நபர் ஒருவர், நிர்வாகத்தின் முயற்சிகளை “அமெரிக்கத் தன்மையற்றது” என்று குறிப்பிட்டார்.
மற்றொருவர், “அமெரிக்கர்களை அழைத்து ஒருவரையொருவர் காட்டிக்கொடுக்க வைக்கும்” எண்ணத்தைக் கேலி செய்துள்ளார்.
எவ்வாறாயினும் ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையின் விளைவாக 59 அறிவிப்புப் பலகைகள் மற்றும் கண்காட்சிகள் அகற்றப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் அடிமைத்தனம், காலநிலை மாற்றம், பெண்கள் உரிமைகள் மற்றும் பூர்வீக அமெரிக்க வரலாறு ஆகியவற்றை பாதித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





