காங்கிரஸ் தலைவர்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!
காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து தமிழக முதல்வர் விஜய் பேச்சு நடத்தியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் விஜய், சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று டெல்லிக்கு புறப்பட்டார்.
முதலமைச்சர் விஜய் டெல்லி சென்றடைந்ததும் , காங்கிரசின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து பேச்சு நடத்தினார்.
கடந்த முறை டெல்லி சென்ற போது சோனியாவை சந்திக்காமல் முதல்வர் சென்னை திரும்பிய நிலையில் இம்முறை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்துள்ளார்.
அத்துடன், டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவையும் முதலமைச்சர் விஜய் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.




