மொஸ்கோவின் இருவேறு இடங்களில் குண்டுவெடிப்பு – முக்கிய தலைவர் படுகொலை!!
மொஸ்கோவின் பாலாஷிகாவில் (Balashikha) நடந்த கார் குண்டுவெடிப்பில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஏவுகணை மற்றும் பீரங்கிப் படைப் பிரிவின் தலைவர் டமிர் டேவிடோவ் (Damir Davydov) கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அத்துடன் மொஸ்கோவின் வெவ்வேறு பககுதிகளில் இன்று இரண்டு கார்குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சமீபகாலமாக உக்ரைன் எல்லை பகுதிகளை தாண்டி மொஸ்கோவை குறிவைத்து தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதற்கிடையே ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிற்கு எதிராக 21வது முறையாகத் தடைகளை விதிக்கும் திட்டத்தை முன்மொழிந்துள்ளது.
இது ரஷ்ய வங்கிகள், கிரிப்டோ நெட்வொர்க்குகள், ட்ரோன் உற்பத்தி மற்றும் எண்ணெய் வர்த்தகர்களைக் கடுமையாக பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




