அரசியல் இலங்கை செய்தி

படையினருக்காக நாம் களமிறங்குவோம்: நாமல் சூளுரை!

” நாம் படையினருக்காக முன்னிலையாவோம். இதனை எவராலும் தடுக்க முடியாது. சுரேஷ் சலே தொடர்பான விசாரணையை அரசியல் மயப்படுத்த வேண்டாம்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் இது தொடர்பில் கூறியவை வருமாறு,

“ பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் இங்கு கதைக்கப்பட்டது.

உள்ளாட்சிசபைத் தேர்தலின்போது புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் பாடலே, தேசிய மக்கள் சக்தியின் பிரச்சார மேடையில் ஒலிக்கப்பட்டது. ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முகநூலில் அதனை பகிர்ந்திருந்தனர்.

ஆனால் கிளிநொச்சி இளைஞர் ஒருவர் புலிகள் தொடர்பில் சொல்லிசை பாடல் பாடியதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். அப்படியானால் என்பிபியின் பிரச்சார மேடையில் ஒலிபரப்பட்ட பாடலுக்கு பொறுப்பு கூறவேண்டியது யார்?

சுரேஷ் சலே தொடர்பில் விசாரணை நடத்துவதில் பிரச்சினை இல்லை. அதனை அரசியல் மயப்படுத்த வேண்டாம். இங்கு மலர்பூஜை நடத்துவது பற்றி கதைத்தனர். ஆம் நாம் படையினருக்காக வழிபாடு நடத்துவோம். அவர்களுக்காக முன்னிலையாவோம்.” – என்றார் நாமல் ராஜபக்ச.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை