திரைப்படப் பாணியில் போதைப்பொருள் கடத்தல் – சாரதி திடீர் மரணம்!
வயிற்றுக்குள் மறைத்து வைத்து ‘ஐஸ்’ போதைப்பொருளைக் கடத்திச் சென்ற சொகுசு பேருந்தின் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த போதைப்பொருள் வயிற்றினுள்ளேயே வெடித்து விஷமாகியதால் அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவ அறிக்கைககள் தெரிவிக்கின்றன.
ஓகவெல பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய சாரதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்தள்ளது.
கடந்த 8ஆம் திகதி மாகும்புரவிலிருந்து தங்காலை நோக்கிச் சென்ற பேருந்து, அதன் இலக்கை அடைந்த சில நிமிடங்களிலேயே சாரதி திடீர் சுகவீனமுற்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவர் தங்காலை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனையில் உயிரிழந்த நபரின் வயிற்றுக்குள் இருந்து போதைப்பொருள் அடங்கிய இரண்டு பாக்கெட்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
வயிற்றிலிருந்த அந்த இரண்டு போதைப்பொருள் பாக்கெட்டுகளில் ஒன்று உடைந்ததால், மரணம் சம்பவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து இவ்வாறு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோரை இனங்காண பொலிஸார் விசேட நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.




