உலகம் செய்தி

சர்வதேச அணுசக்தி முகமை அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது – ஈரான் குற்றச்சாட்டு

  • May 10, 2026
  • 0 Comments

சர்வதேச அணுசக்தி முகமை அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது என ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பகாயி (Baghaei) , ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஈரானின் ஏவுகணை நடவடிக்கைகள் குறித்து கருத்து வெளியிடுவது, சர்வதேச அணுசக்தி முகமையின் அதிகார வரம்பிற்குள் வராது என்று தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “சரிபார்ப்பதே சர்வதேச அணுசக்தி முகமையின் பணியென சுட்டிக்காட்டிய அவர் அரசியல் பிரச்சாரம் செய்வது அல்ல என குறிப்பிட்டுள்ளார் மேலும், […]

இந்தியா செய்தி

புதிய தோற்றத்தை தமிழ்நாடு தேர்ந்தெடுத்துவிட்டது – ராகுல் காந்தி

  • May 10, 2026
  • 0 Comments

தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைகளை நிறைவேற்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். ‘ஒரு புதிய தலைமுறை, ஒரு புதிய குரல், ஒரு புதிய தோற்றத்தை தமிழ்நாடு தேர்ந்தெடுத்துவிட்டது என்றும் அவர் கூறினார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை நடந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் […]

ஆசியா

பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் – 10இற்கும் மேற்பட்டோர் பலி!

  • May 10, 2026
  • 0 Comments

வடமேற்கு பாகிஸ்தானில் காவல்சாவடி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதலில்  14 காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். தற்கொலைத் தாக்குதல் நடத்தியவர்  வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை காவல் சாவடி மீது மோதச் செய்து வெடிக்கவைத்துள்ளார். பின்னர், பயங்கரவாதிகள் அந்த இடத்திற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கிடையில், தாக்குதலுக்கு உதவ வந்திருந்த மற்ற பாதுகாப்புப் படையினரும், வழியை மறித்திருந்த பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா

“சாப்பாட்டிற்குக் கூட சிரமப்பட்டோம்”: விஜய் எதையும் மறக்கவில்லை

  • May 10, 2026
  • 0 Comments

தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றுள்ள நிலையில், அவரது தந்தையும் திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் உருக்கமான நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த அவர், “விஜய் பிறந்தபோது நான் உதவி இயக்குநராக இருந்தேன். அந்த காலத்தில் குடும்ப சூழ்நிலை மிகவும் கஷ்டமாக இருந்தது” எனத் தெரிவித்துள்ளார். மேலும், “விஜய்யின் சிறுவயதில் சாப்பாட்டிற்குக் கூட மிகவும் சிரமப்பட்டோம். அந்த நாட்கள் அனைத்தும் விஜய்க்கு இன்னும் ஞாபகம் உள்ளது” என நெகிழ்ச்சியுடன் கூறினார். விஜய் இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றிருப்பது ஒரு […]

இலங்கை

மீண்டும் பயணத்தை ஆரம்பிக்கவுள்ள யாழ்தேவி!

  • May 10, 2026
  • 0 Comments

கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை வரை பயணிக்கும் ‘யாழ் தேவி’ கடுகதி ரயில் சேவை நாளை (11) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது. பயணிகளின் வசதிக்காக இந்த ரயிலில் நான்கு முதலாம் வகுப்பு பெட்டிகள் குளிரூட்டப்பட்ட வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதற்கான ஆசனங்களை பயணிகள் முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள முடியும். ரயில் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக அல்லது ஆசன முன்பதிவு வசதி கொண்ட ரயில் நிலையங்களுக்குச் சென்று பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்துகொள்ள முடியும்.

இந்தியா முக்கிய செய்திகள்

தமிழகத்தின் நிதி நிலைமை – வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்!

  • May 10, 2026
  • 0 Comments

தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக்கொண்டதை தொடர்ந்து மூன்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்காக உரையாற்றிய அவர், தமிழகத்தின் தற்போதை நிதி நிலைமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார். இதற்கமைய தமிழக கஜானா காலியாகவுள்ளதாக தெரிவித்த அவர் இது தொடர்பில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றார். அத்துடன்  நான் தேவதூதன் அல்ல, சமானிய மனிதன், பொய்யான வாக்குறுதி கொடுத்து ஏமாற்ற மாட்டேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார் மேலும்  தன்னுடைய அரசியல் பயணத்தில் இவ்வளவு காலம் தன்னை […]

இலங்கை

பாடசாலைகளில் பரவும் மர்மக் காய்ச்சல் – விடுமுறை நீட்டிப்பு!

  • May 10, 2026
  • 0 Comments

தெனியாய கல்வி வலயத்தில் உள்ள நான்கு பாடசாலைகளில் மர்மக் காய்ச்சல் பரவி வருகின்ற நிலையில், தற்போது அந்த பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தெனியாய மத்திய கல்லூரி, தெனியாய ராஜபக்ஷ மகா வித்தியாலயம், தெனியாய புனித மத்தேயு இருமொழி மகா வித்தியாலயம் மற்றும் பல்லேகம சித்தார்த்த வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும்  நடவடிக்கையின் ஒரு பகுதியாக , சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் […]

இந்தியா

தமிழகத்தின் 18 ஆவது அமைச்சரவை பதவியேற்பு!

  • May 10, 2026
  • 0 Comments

தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக்கொண்டதை தொடர்ந்து தற்போது அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு இடம்பெறுகிறது. இதற்கமைய  புஸ்சி ஆனந்த் அமைச்சராக பதவி ஏற்றார். இதனைத் தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா பதவியேற்றார். அடுத்ததாக  கே.ஜி. அருண் ராஜ் பதவி ஏற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து செங்கோட்டையன் பதவியேற்றார். 6-வதாக வெங்கடரமணன் அமைச்சராக பொறுப்பேற்றார். 7-வதாக நிர்மல் குமார் அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். 8-வதாக ராஜ் மோகன் அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். 9-வதாக  T. K பிரபு  அமைச்சராக […]

இந்தியா

“ஜோசப் விஜய் எனும் நான்” – பதவியேற்றார் விஜய்!

  • May 10, 2026
  • 0 Comments

தமிழகத்தின் முதலமைச்சராக த.வெ.க தலைவர் ஜோசப் விஜய் சற்றுமுன் பதவியேற்றுக்கொண்டார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமாகியது பதவியேற்பு விழா! தமிழக முதல்வராக ஜோசப் விஜய் இன்று பதவியேற்கவுள்ளார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்வில் திரைபிரபலங்கள் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள பலர் கலந்துகொண்டுள்ளனர். தற்போது த.வெ.க தலைவர் விஜய் அரங்கிற்கு வருகை தந்துள்ளதுடன் பதவியேற்பு நிகழ்வு தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமாகியுள்ளது.  

இலங்கை

4 கோடி ரூபாய்க்கும் அதிக போதைப்பொருளுடன் இளைஞர் கைது

  • May 10, 2026
  • 0 Comments

‘hashish’ போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்தி வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்ட இலங்கையர் ஒருவர் இன்று (10) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் கொண்டு வந்த பயணப் பொதியினுள் சொக்லேட் போன்று பொதி செய்யப்பட்ட 15 உறைகளில் இந்த hashish’ போதைப்பொருள் கண்டறியப்பட்டது. கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருள் தொகையின் பெறுமதி […]