இலங்கை

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு புதிதாக வரி விதிக்க தீர்மானம்!

  • May 16, 2026
  • 0 Comments

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான பொருந்தக்கூடிய சுங்க இறக்குமதி வரிகள் மீது கூடுதலாக 50 சதவீத வரி விதிக்க நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட ஒரு சிறப்பு வர்த்தமானி அறிவிப்பின்படி, இந்த கூடுதல்  வரி இன்று (15) முதல் மூன்று மாத காலத்திற்கு விதிக்கப்பட உள்ளது. அதன்படி, இதுவரை இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனங்கள் மீது விதிக்கப்பட்டு வந்த 30% சுங்க இறக்குமதி வரியின் மீது கூடுதலாக 50 சதவீத […]

உலகம் செய்தி

“தனிநாடு விவகாரம்” தைவானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

  • May 16, 2026
  • 0 Comments

தைவான், சீனாவிடமிருந்து தம்மை தனிநாடாக பிரகடனப்படுத்திக் கொள்ளக் கூடாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். சீன விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பின்னர் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே ட்ரம்ப் இவ்வாறு எச்சரித்துள்ளார். “ யாரும் தங்களைத் தனிநாடாகப் பிரகடனப்படுத்துவதை நான் விரும்பவில்லை” என்று ட்ரம்ப் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார். தைவான் தன்னை இறையாண்மையுள்ள நாடாகவே கருதுவதால், தாங்கள் தனியாக சுதந்திரப் பிரகடனம் செய்யத் தேவையில்லை என்று தைவான் ஜனாதிபதி லாய் சிங்-தே குறிப்பிட்டுள்ளார். தைவானுக்குத் தற்காப்பு […]

செய்தி விளையாட்டு

பாகிஸ்தான் அணிக்கு அபராதம்!

  • May 16, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஐசிசியால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி , பங்களாதேசுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே மிர்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 104 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. எனினும், குறித்த போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் பாகிஸ்தான் அணி மெதுவாகப் பந்துவீசியது (8 ஓவர்கள் குறைவு) தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த அணிக்கு போட்டி ஊதியத்தில் 40 சதவீதமும், 8 புள்ளிகளையும் அபராதமாக விதித்து ஐசிசி […]

இலங்கை

பொது மக்களே அவதானம்!

  • May 16, 2026
  • 0 Comments

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் அதே பகுதியில் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தாக்கத்தால், மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் […]

செய்தி விளையாட்டு

மண்கவ்வியது சென்னை அணி: play-off வாய்ப்பும் கேள்விக்குறி!

  • May 16, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 59 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது. லக்னோவின் ஏகானா மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற லக்னோ அணி தலைவர் ரிஷப் பண்ட் , முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதற்கமைய களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்தனர். 20 […]

ஆஸ்திரேலியா செய்தி

40 ஆண்டு கால மாற்றம்: ஆஸ்திரேலிய பழங்குடியினப் பெண்களின் வேலைவாய்ப்பு இருமடங்கு உயர்வு!

  • May 16, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் பூர்வக்குடி மக்களின் வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு பெண்களே முக்கியக் காரணியாக விளங்குவதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. ஆண்கள் கல்வி கற்பதில் பின்தங்குவதும், சட்டச் சிக்கல்களில் சிக்குவதும் இதற்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் மற்றும் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து 1981 முதல் 2021 வரையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகளை ஆய்வு செய்தனர். கடந்த 40 ஆண்டுகளில் பழங்குடியின மக்களிடையே ஏற்பட்ட வேலைவாய்ப்பு வளர்ச்சியில் 93 விழுக்காடு பெண்களால் மட்டுமே சாத்தியமாகியுள்ளது. பூர்வக்குடி […]

இலங்கை செய்தி

ரூபாயின் தொடர் சரிவு : அதிகரித்த வாழ்க்கை செலவால் திண்டாடும் மக்கள்!

  • May 15, 2026
  • 0 Comments

ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்தால், எதிர்காலத்தில் எரிபொருள் விலைகள், மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்கள், அத்துடன் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயரக்கூடும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 331 ரூபாயை தாண்டியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட   பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ, மத்திய வங்கி புழக்கத்தில் உள்ள டொலர்களை வாங்குவதால் டொலர்களுக்கான தேவை அதிகரித்ததும், புழக்கத்தில் ரூபாய் அதிகமாக இருப்பதும் ரூபாயின் மதிப்பு சரிவுக்கு வழிவகுத்துள்ளதாகக் கூறினார். […]

உலகம்

ஃபுஜைரா வழியாக எண்ணெய் ஏற்றுமதி : அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் உத்தரவு!

  • May 15, 2026
  • 0 Comments

ஐக்கிய அரபு அமீரகம், 2027-ஆம் ஆண்டுக்குள் ஃபுஜைரா வழியாகத் தனது ஏற்றுமதித் திறனை இரட்டிப்பாக்கும் நோக்கில், ஒரு புதிய எண்ணெய் குழாய் அமைக்கும் பணியை விரைவுபடுத்தி வருகிறது. அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத், மேற்கு-கிழக்கு குழாய் திட்டத்தை விரைவுபடுத்துமாறு அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்திற்கு (ADNOC) உத்தரவிட்டுள்ளார். ஹோர்முஸ் ஜலசந்தியை தவிர்ப்பதற்காக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது. ஐக்கிய அரபு அமீரகம் ஏற்கனவே அபுதாபி கச்சா எண்ணெய் குழாய் […]

இலங்கை

16 வயது சிறுமி கடத்தல் : மட்டக்களப்பில் பரபரப்பு!

  • May 15, 2026
  • 0 Comments

மட்டக்களப்பில் 16 வயது சிறுமி ஒருவரை மயக்க மருந்து கொடுத்து கடத்த முற்பட்ட சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. தமது தந்தையுடன் மட்டக்களப்பு நகரில் உள்ள தனியார் வகுப்பு ஒன்றுக்காக சென்ற சிறுமியே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். குறித்த தனியார் வகுப்பு நேற்று இடம்பெறாததன் காரணமாக தந்தை மட்டக்களப்பு நகரில் உள்ள தமது உறவினர் வீடொன்றுக்கு அருகில் சிறுமியை விட்டு  சென்றுள்ளார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் குறித்த சிறுமி அந்த உறவினர் வீட்டை சென்றடையவில்லை என, அவருடைய தந்தைக்கு தகவல் […]

உலகம் செய்தி

தைவானை பாதுகாக்குமா அமெரிக்கா? ட்ரம்பிடம் நேரில் வினா தொடுத்த சீன ஜனாதிபதி!

  • May 15, 2026
  • 0 Comments

சீன ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது, தைவான் விவகாரம் குறித்து தான் எந்தவொரு உறுதிமொழியையும் வழங்கவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீன விஜயத்தை நிறைவு செய்து வாஷிங்டன் திரும்பும் வழியில் விமானத்தில் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தைவானுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அமெரிக்கா அதைப் பாதுகாக்குமா என்று சீன ஜனாதிபதி தன்னிடம் நேரடியாகக் கேட்டதாகவும், அதற்கு “நான் அதைப் பற்றிப் பேச விரும்பவில்லை” என்று பதிலளித்தாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும், […]