இந்தியா செய்தி

சீன, ரஷ்ய ஜனாதிபதிகளை சந்திக்கிறார் பிரதமர் மோடி

சீன, ரஷ்ய ஜனாதிபதிகளை சந்திக்கிறார் பிரதமர் மோடி

ஆகஸ்ட் 31-ம் திகதி கிர்​கிஸ்​தான் தலைநகர் பிஷ்கெக்​கில் நடை​பெறும் எஸ்​சிஓ உச்சி மாநாட்​டில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​கிறார். இதில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், சீன ஜனாதிபதி ஜி ஜின்​பிங்கை அவர் சந்​தித்​துப் பேசு​வார் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

பிரதமர் நரேந்​திர மோடி நாளை உஸ்​பெகிஸ்​தான் தலைநகர் தாஷ்கண்ட் செல்​கிறார்.

அங்கு அந்த நாட்டு ஜனாதிபதி ஷவ்​கத் மிர்சியோயேவை அவர் சந்​தித்​துப் பேசுகிறார். அப்​போது வர்த்தகம், முதலீடு, பாது​காப்​பு, டிஜிட்​டல் தொழில்​நுட்​பம், எரிசக்தி, கல்வி ஆகிய துறை​களில் இரு நாடு​கள் இடையி​லான ஒத்​துழைப்பை அதி​கரிப்​பது குறித்து இரு தலை​வர்​களும் முக்​கிய ஆலோ​சனை நடத்த உள்​ளனர்.

நாளை​யும் நாளை மறு​தின​மும் பிரதமர் நரேந்​திர மோடி தாஷ்கண்​டில் தங்​கி​யிருக்​கிறார்.

வரும் 31-ம் திகதி கிர்​கிஸ்​தான் தலைநகர் பிஷ்கெக்​குக்கு அவர் செல்​கிறார். அங்கு ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் (எஸ்​சிஓ) உச்சி மாநாடு ஆகஸ்ட் 31, செப்​டம்​பர் 1 ஆகிய திகதிகளில் நடை​பெறுகிறது.

இதில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​கிறார். எஸ்சிஓ அமைப்​பில் சீனா, ரஷ்​யா, கஜகஸ்​தான், கிர்​கிஸ்​தான், தஜிகிஸ்​தான், உஸ்​பெகிஸ்​தான், இந்​தி​யா, பாகிஸ்​தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடு​கள் உறுப்​பினர்​களாக உள்​ளன.

இந்த நாடு​களின் தலை​வர்​கள் உச்சி மாநாட்​டில் பங்கேற்கின்றனர். கடந்த 2025-ம் ஆண்டு சீனா​வின் தியான்​ஜின் நகரில் நடை​பெற்ற எஸ்​சிஓ உச்சி மாநாட்​டில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றார். அப்​போது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், சீன ஜனாதிபதி ஜி ஜின்​பிங்​குடன் அவர் முக்​கிய பேச்​சு​வார்த்தை நடத்தி​னார்.

தற்​போது கிர்​கிஸ்​தான் தலைநகர் பிஷ்கெக்​கில் நடை​பெறும் உச்சி மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​கின்​றனர்.

இந்த மாநாட்​டின்​போது ரஷ்ய ஜனாதிபதி புதின், சீன ஜனாதிபதி ஜி ஜின்​பிங் உள்​ளிட்​டோரை பிரதமர் நரேந்​திர மோடி சந்​தித்​துப் பேசு​வார் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

வரும் செப்​டம்​பர் 12, 13-ம் திகதிகளில் டெல்​லி​யில் பிரிக்ஸ் கூட்​டமைப்​பின் உச்சி மா​நாடு நடை​பெறுகிறது. இதற்கு முன்​னோட்​ட​மாக எஸ்​சிஓ உச்சி மா​நாடு அமை​யும் என்​று அரசி​யல்​ நோக்​கர்​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி