ஆஸ்திரேலியா செய்தி

சிட்னியில் ‘தமிழர் நினைவுத் தூபி’ திறப்பு!

  • May 16, 2026
  • 0 Comments

இனப்படுகொலைக்கு இலக்கான தாயகத் தமிழ் மக்களின் நினைவாகவும், அவர்களின் நினைவு நாட்களில் மலர் தூவி வணக்கம் செலுத்துவதற்கும் ஆஸ்திரேலியா, சிட்னி நகரில் நிரந்தர ‘தமிழர் நினைவுத் தூபி’ திறக்கப்பட்டுள்ளது. இதற்குரிய நிகழ்வு இன்று (16) சனிக்கிழமை காலை 9:45 மணிக்கு நடைபெற்றது. Cumberland நகர சபை முதல்வர் பங்கேற்று, நினைவுத் தூபியை திறந்து வைத்தார். சிட்னியில் உள்ள Pendle Hill Civic Park பொது இடத்தில், Cumberland நகர சபையின் பேராதரவுடன் இந்த நினைவுத் தூபி நிறுவப்பட்டுள்ளது. […]

ஐரோப்பா செய்தி

Nigel Farage இற்கு ராஜதந்திர வட்டாரத்திலும் செல்வாக்கு: லண்டனில் நடந்த முக்கிய சந்திப்பு

  • May 16, 2026
  • 0 Comments

பிரிட்டனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிவிவகார அமைச்சர் Abdullah bin Zayed , பிரிட்டனின் முக்கிய அரசியல் தலைவர்களுடன் பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளார். இதன்ஓர் அங்கமாக, பிரிட்டனின் வளர்ந்து வரும் அரசியல் சக்தியாகப் பார்க்கப்படும் ‘Reform UK’ கட்சியின் தலைவர் Nigel Farage உடன் அவர் முக்கிய பேச்சுவார்த்தையொன்றை நடத்தியுள்ளார். இச்சந்திப்பின் போது, அமீரகத்தின் மீது ஈரானால் நடத்தப்பட்ட ஆக்கிரமிப்புத் தாக்குதல்கள் மற்றும் […]

உலகம்

காங்கோவை அச்சுறுத்தும் எபோலா – மரணித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு!

  • May 16, 2026
  • 0 Comments

காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்கு இடுரி மாகாணத்தில் எபோலா நோய் தாக்கத்தால் இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவின் உயர்மட்ட சுகாதார நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 240 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தங்கச் சுரங்க நகரங்களான மோங்வாலு மற்றும் ருவாம்பாராவில் அதிகளவிலான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். தொடர்புடைய செய்தி  காங்கோவில் மீண்டும் பரவும் எபோலா வைரஸ் தொற்று – ஒருவர் பலி!      

செய்தி பொழுதுபோக்கு

“நடிக்கமாட்டேன்: படம் திரைக்கு வராது” – ரவி மோகன் உருக்கம்!

  • May 16, 2026
  • 0 Comments

மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்து கிடைக்கும் வரை தான் சினிமாவில் நடிக்கப்போவதில்லை என நடிகர் ரவி மோகன் தெரிவித்துள்ளார். இன்று நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “ இதுவரை காலமும் நான் மௌனம் காத்தேன். ஆனால் அவ்வாறு பேசாமல் இருந்தது தவறு என்பது தற்போது புரிகின்றது. தேவையில்லாத அவமானங்களை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே, என் குடும்பத்தினரை பற்றி அவதூறாக பேசினாலோ சீண்டினாலோ சும்மா இருக்க மாட்டேன். அதேபோல விவாகரத்து கிடைக்கும் வரை நான் நடிக்கப்போவதில்லை. […]

இலங்கை செய்தி

சீரற்ற காலநிலை: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

  • May 16, 2026
  • 0 Comments

இலங்கையில் யாழ்ப்பாணம், புத்தளம் உட்பட 12 மாவட்டங்களில் நிலவும் கடும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால்4 ஆயிரத்து 300 இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 338 குடும்பங்களை சேர்ந்த 4 ஆயிரத்து 354 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவர் உயிரிழந்துள்ளனர். 149 வீடுகள் பகுதியளவும், ஒரு வீடு முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. புத்தளம் மாவட்டத்தில் மாத்திரம் வெள்ளத்தால் ஆயிரத்து 488 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் ஆயிரத்து 469 பேரும், களுத்துறையில் […]

உலகம்

பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையற்ற தன்மை – கச்சா எண்ணெய் விலை உயர்வு!

  • May 16, 2026
  • 0 Comments

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சரின் கருத்துக்கள், ஹோர்முஸ் ஜலசந்தியைச் சுற்றியுள்ள கப்பல் தாக்குதல்கள் மற்றும் கைப்பற்றல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் குறித்த நம்பிக்கையை வலுவிழக்க செய்துள்ளன. பிரென்ட் கச்சா எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்கள் ஒரு பீப்பாய்க்கு  109.26 டொலராக நிலைபெற்றன.  இது 3.54  டொலர் அல்லது 3.35 சதவீத உயர்வாகும். அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் எதிர்கால ஒப்பந்தங்கள் ஒரு பீப்பாய்க்கு  105.42 டொலராக முடிவடைந்தன.  இது  4.25 டொலர் அல்லது […]

உலகம் செய்தி

ஹமாஸ் தலைவரை குறிவைத்து தாக்குதல்: காசாவில் குழந்தை உட்பட எழுவர் பலி!

  • May 16, 2026
  • 0 Comments

காசாவின் ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தை உட்பட ஏழு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 50 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவுத் தலைவரான இஸ் அல்-தின் அல்-ஹடாத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களிலேயே பொது மக்கள் பலியாகியுள்ளனர். காசாவில் போர் நிறுத்தம் அமுலில் இருந்தாலும், அதனைமீறும் வகையில் இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல்களை நடத்திவருகின்றது. காசாவின் பெரும்பகுதியை இஸ்ரேலியப் படைகள் இன்னும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. போரினால் […]

செய்தி விளையாட்டு

கொல்கத்தா, குஜராத் அணிகள் இன்று மோதல்!

  • May 16, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்றிரவு நடைபெறும் 60 ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் போட்டி ஆரம்பமாகும். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 6 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 9 புள்ளிகளுடன் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணி தோல்வி அடைந்தால் […]

இலங்கை

ரயில் தடம் புரண்டு விபத்து – 12 பேர் காயம்!

  • May 16, 2026
  • 0 Comments

வனவசல மற்றும் ஹுனுபிட்டிய இடையேயான பாதையில் ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளனர். பொல்கஹவெலவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலே இன்று அதிகாலை தடம் புரண்டு விபத்தில் சிக்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பயணிகள் விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டடுள்ளனர். அதேநேரம் படுகாயமடைந்த பயணி ஒருவர்  மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் (ASP) எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார். […]

உலகம் செய்தி

ISIS அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவர் சுட்டுக்கொலை! ட்ரம்ப் அறிவிப்பு!

  • May 16, 2026
  • 0 Comments

ISIS அமைப்பின் மிக முக்கியமான இரண்டாம் நிலைத் தலைவர், கூட்டு ராணுவ நடவடிக்கை மூலம் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். Abu-Bilal al-Minuki , நைஜீரியாவில் பதுங்கி இருந்த நிலையிலேயே அமெரிக்க மற்றும் நைஜீரியப் படைகள் இணைந்து அவரை கொன்றுள்ளன. மிகவும் நுணுக்கமாகத் திட்டமிடப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கை மூலம் ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவிற்கு எதிராகத் திட்டமிடப்பட்ட பல பயங்கரவாதச் செயல்கள் முறியடிக்கப்பட்டுள்ளன. துல்லியமான உளவுத் தகவல்களின் அடிப்படையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக […]