செய்தி பொழுதுபோக்கு

“நடிக்கமாட்டேன்: படம் திரைக்கு வராது” – ரவி மோகன் உருக்கம்!

மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்து கிடைக்கும் வரை தான் சினிமாவில் நடிக்கப்போவதில்லை என நடிகர் ரவி மோகன் தெரிவித்துள்ளார்.

இன்று நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“ இதுவரை காலமும் நான் மௌனம் காத்தேன். ஆனால் அவ்வாறு பேசாமல் இருந்தது தவறு என்பது தற்போது புரிகின்றது.

தேவையில்லாத அவமானங்களை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

எனவே, என் குடும்பத்தினரை பற்றி அவதூறாக பேசினாலோ சீண்டினாலோ சும்மா இருக்க மாட்டேன்.

அதேபோல விவாகரத்து கிடைக்கும் வரை நான் நடிக்கப்போவதில்லை. எனது படங்கள் திரைக்கு வராது.
எனது குழந்தைகளை பார்க்க விடமாட்டுகின்றனர்.

அவர்களுக்காக நான் அனைத்தையும் செய்துள்ளேன். ஆகவே, பாசத்தை பற்றி பேச வரக்கூடாது.” – எனவும் ரவி மோகன் குறிப்பிட்டுள்ளார்.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!