ISIS அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவர் சுட்டுக்கொலை! ட்ரம்ப் அறிவிப்பு!
ISIS அமைப்பின் மிக முக்கியமான இரண்டாம் நிலைத் தலைவர், கூட்டு ராணுவ நடவடிக்கை மூலம் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
Abu-Bilal al-Minuki , நைஜீரியாவில் பதுங்கி இருந்த நிலையிலேயே அமெரிக்க மற்றும் நைஜீரியப் படைகள் இணைந்து அவரை கொன்றுள்ளன.
மிகவும் நுணுக்கமாகத் திட்டமிடப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கை மூலம் ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவிற்கு எதிராகத் திட்டமிடப்பட்ட பல பயங்கரவாதச் செயல்கள் முறியடிக்கப்பட்டுள்ளன.
துல்லியமான உளவுத் தகவல்களின் அடிப்படையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக டிரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்த நடவடிக்கை ஒரு மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.
இத்தகைய கூட்டு முயற்சிகள் பயங்கரவாத இயக்கங்களின் வலிமையைக் குறைத்து, உலக நாடுகளுக்குப் பாதுகாப்பை உறுதி செய்கிறது எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.




