சிட்னியில் ‘தமிழர் நினைவுத் தூபி’ திறப்பு!
இனப்படுகொலைக்கு இலக்கான தாயகத் தமிழ் மக்களின் நினைவாகவும், அவர்களின் நினைவு நாட்களில் மலர் தூவி வணக்கம் செலுத்துவதற்கும் ஆஸ்திரேலியா, சிட்னி நகரில் நிரந்தர ‘தமிழர் நினைவுத் தூபி’ திறக்கப்பட்டுள்ளது.
இதற்குரிய நிகழ்வு இன்று (16) சனிக்கிழமை காலை 9:45 மணிக்கு நடைபெற்றது.
Cumberland நகர சபை முதல்வர் பங்கேற்று, நினைவுத் தூபியை திறந்து வைத்தார்.
சிட்னியில் உள்ள Pendle Hill Civic Park பொது இடத்தில், Cumberland நகர சபையின் பேராதரவுடன் இந்த நினைவுத் தூபி நிறுவப்பட்டுள்ளது.
‘தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – சிட்னி’ அமைப்பின் முன்னெடுப்பில், சிட்னியிலுள்ள அனைத்துத் தமிழர் அமைப்புகளின் ஆதரவோடும் நினைவுத்தூபி நிறுவப்பட்டுள்ளது.




