ஐரோப்பா செய்தி

வட்டி விகித குறைப்பு சாத்தியப்படுமா? இங்கிலாந்து வங்கியின் தீர்மானம்!!

  • May 2, 2026
  • 0 Comments

இங்கிலாந்து வங்கியானது வட்டி விகிதங்களில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ளாமல் 3.75 என்ற தற்போதைய நிலையை பேண தீர்மானித்துள்ளதாக  அதன் ஆளுநர் ஆண்ட்ரூ பெய்லி அறிவித்துள்ளார். மத்திய வங்கியின் வட்டி விகிதங்களை நிர்ணயிக்கும் பணவியல் கொள்கைக் குழு (MPC), அதன் சமீபத்திய கூட்டத்திற்குப் பிறகு, இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. வட்டி விகிதங்களை மாற்றாமல் வைப்பதற்கான ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட குழுவின் வாக்கெடுப்பு, எட்டுக்கு ஒன்று என்ற விகிதத்தில் பிளவுபட்டது. வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் ஹியூ பில் […]

உலகம் செய்தி

60 நாள் கெடுவை முடக்கிய தற்காலிக போர் நிறுத்தம்!

  • May 2, 2026
  • 0 Comments

“ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்தமானது, போருக்கான நாடாளுமன்ற அனுமதியைப் பெறுவதற்கான 60 நாள் காலக்கெடுவை நிறுத்திவைக்கிறது.” இவ்வாறு அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்செத் விளக்கமளித்துள்ளார். ஈரான்மீதான ராணுவ நடவடிக்கையை கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்கா ஆரம்பித்தது. போர் தொடுப்பதற்குரிய கட்டளையை பிறப்பிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தாலும் அது தொடர்பில் 60 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற வேண்டும். இதற்கமைய கடந்த மார்ச் 2 ஆம் திகதி இது தொடர்பில் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு ட்ரம்ப் […]

உலகம் செய்தி

ஈரானின் நிபந்தனைகளை ஏற்க முடியாது: ட்ரம்ப் திட்டவட்டம்!

  • May 2, 2026
  • 0 Comments

அமைதி பேச்சுக்காக ஈரான் முன்மொழிந்துள்ள நிபந்தனைகளில் தனக்கு திருப்தி இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேற்காசிய போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஈரான் அரசு திருத்தப்பட்ட புதிய நிபந்தனைகளை , பாகிஸ்தான் ஊடாக அமெரிக்காவிடம் தெரியப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி ட்ரம்ப், “ இரண்டு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் உள்ளது. எனினும், போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் முன்மொழிந்துள்ள நிபந்தனைகள் ஏற்புடையவை அல்ல. அது […]

செய்தி விளையாட்டு

சென்னை, மும்பை அணிகள் இன்று மோதல்!

  • May 2, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்றிரவு நடைபெறும் 44 ஆவது லீக் ஆட்டத்தில் Chennai Super Kings, Mumbai Indians ஆகிய அணிகள் மோதுகின்றன. இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகும். ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமாக திகழ்ந்த மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே ஆகிய இரு அணிகளும், நடப்பு சீசனில் தடுமாறி வருகின்றன. இது மேற்படி அணிகளின் ரசிகர்களை சோகத்தில் மூழ்கடித்துள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி 8 ஆட்டங்களில் […]

இலங்கை

யாழில் கறிவேப்பிலை மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து பலி!

  • May 2, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் நேற்று (01) கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறை வீதி, நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த 64 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த நபர் கறிவேப்பிலை பறிப்பதற்கு சென்று மரத்தில் ஏறியபோது தவறி கீழே விழுந்து மயக்கமுற்றுள்ளார். இதன்போது வீதியால் சென்றவர்கள் அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின்னர் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.இச்சம்பவம் […]

விளையாட்டு

டெல்லி அணி அபார வெற்றி!

  • May 2, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரின் 43-வது லீக் ஆட்டத்தில் Delhi Capitals அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய Rajasthan Royals அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளித்தது. இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி (4) மற்றும் யஷஸ்வி ஜெய்சவால் (6) ஆகியோர் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர். எனினும், அணித் தலைவர் ரியான் பராக் (90 ஓட்டங்கள், 50 பந்துகள்) மற்றும் துருவ் ஜூரெல் […]

உலகம் செய்தி

‘ராஜதந்திர மோதல்’ – ஜேர்மனியிலிருந்து 5000 படையினரை மீளப்பெறுகிறது அமெரிக்கா!

  • May 2, 2026
  • 0 Comments

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் அமெரிக்காவிற்கும் ஜேர்மனிக்கும் இடையே ஏற்பட்டுள்ள ராஜதந்திர மோதல்களால், அமெரிக்கா ஜேர்மனியிலிருந்து 5,000 துருப்புக்களை வெளியேற்றத் திட்டமிட்டுள்ளது. ஜேர்மன் சான்சலர் மெர்ஸ் , அமெரிக்காவின் போர் யுக்திகளை விமர்சித்த நிலையில், அதற்குப் பதிலடியாக இந்த அதிரடி முடிவை ட்ரம்ப் எடுத்துள்ளார். இந்தத் துருப்புக்கள் குறைப்பு அடுத்த ஓராண்டிற்குள் நடைபெறும் என்றும், இது ஐரோப்பாவில் அமெரிக்காவின் இராணுவப் பிரசன்னத்தை 2022-க்கு முந்தைய நிலைக்குக் கொண்டு செல்லும் என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது. தங்கள் பிராந்திய […]

இலங்கை செய்தி

“போலிச்சண்டியர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்”

  • May 2, 2026
  • 0 Comments

“வடக்கிலும் தையிட்டிப் பிரச்சினை போன்று வேறு பல பிரச்சினைகள் உள்ளன. அந்தப் பிரச்சினைகளை வைத்துக் கொண்டே வடக்கில் உள்ள அரசியல் தலைவர்கள் தங்கள் அரசியலை தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.” – என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் நேற்று யாழ்ப்பாணம் நெடுந்தூர பஸ் நிலையத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:- “இலங்கையில் கடந்த கால ஆட்சியாளர்கள் உருவாக்கிய பிரச்சினைகள் […]

இலங்கை செய்தி

செம்மணியில் மேலும் 3 எலும்புக்கூடுகள் அடையாளம்! அகழ்வுப் பணிகள் தீவிரம்!!

  • May 2, 2026
  • 0 Comments

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் ஐந்தாம் நாளான நேற்று வெள்ளிக்கிழமை, மேலும் மூன்று மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்ட மூன்று மனித எலும்புக்கூடுகளையும் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நேற்று கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளுடன் சேர்த்து, இதுவரையான காலப்பகுதியில் செம்மணி மனிதப் புதைகுழியில் மொத்தம் 244 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்டவற்றில் 240 மனித எலும்புக்கூடுகள் ஏற்கனவே முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன […]

உலகம்

தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான தகவல்!

  • May 2, 2026
  • 0 Comments

சர்வதேச சந்தையில் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில், இன்று தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கம் 4,615.24 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதேநேரம் ஒரு அவுண்ஸ் வெள்ளி 75.36 அமெரிக்க டொலருக்கு இன்று விற்பனையாகின்றது.