ஈரானின் நிபந்தனைகளை ஏற்க முடியாது: ட்ரம்ப் திட்டவட்டம்!
அமைதி பேச்சுக்காக ஈரான் முன்மொழிந்துள்ள நிபந்தனைகளில் தனக்கு திருப்தி இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேற்காசிய போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஈரான் அரசு திருத்தப்பட்ட புதிய நிபந்தனைகளை , பாகிஸ்தான் ஊடாக அமெரிக்காவிடம் தெரியப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி ட்ரம்ப்,
“ இரண்டு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் உள்ளது.
எனினும், போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் முன்மொழிந்துள்ள நிபந்தனைகள் ஏற்புடையவை அல்ல. அது எனக்கு திருப்திகரமாக இல்லை.
அவர்களின் அரசு தலைமை ஒருங்கிணையாமல் உள்ளது.” – என்று குறிப்பிட்டார்.
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற முதல் சுற்று அமைதி பேச்சு தோல்வியில் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை விரைவில் முன்னெடுப்பதற்கு பாகிஸ்தான் முயற்சித்துவருகின்றது.
இருப்பினும் அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு தரப்பும் முரண்படுவதால் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளது.





