உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கும் ட்ரம்ப் : பதிலடி கொடுத்த ஈரான்!

  • May 4, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் ஜலசந்தியை இன்று காலையிலேயே மீண்டும் திறப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார். மனதாபிமான நடவடிக்கையாக இதனை மேறகொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். “Project Freedom” திட்டத்தின் கீழ் எந்தத் தவறும் செய்யாத மக்கள், நிறுவனங்கள் மற்றும் நாடுகளை விடுவிப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். ஈரானுக்கு எதிராக மீண்டும் தாக்குதல்களை நடத்த உத்தரவிட “வாய்ப்பு” இருப்பதாக கூறியிருந்த நிலையில் தற்போது இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதற்கிடையே ஈரானின் இராணுவம், ஹோர்முஸ் ஜலசந்தியின் மீதான பாதுகாப்புக் கட்டுப்பாட்டைத் தாங்கள் தக்கவைத்துக் […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

விஜய்க்கு குவியும் வாழ்த்து! மண்கவ்விய ஸ்டாலின்!!

  • May 4, 2026
  • 0 Comments

தமிழக தேர்தலில் இதுவரையில் 109 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும், அதன் தலைவர் விஜய்க்கும் அரசியல் பிரமுகர்களும், திரையுலக நட்சத்திரங்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். சமூகவலைத்தளங்கள் முழுவதையும் தவெக ஆக்கிரமித்துள்ளது. இலங்கை உட்பட உலக நாடுகளில் வாழும் விஜய் ரசிகர்கள் தவெக வெற்றியை கொண்டாடிவருகின்றனர். மகிழ்ச்சியை வெளிப்படுத்தி சமூகவலைத்தளங்களில் பதிவுகளை பதிவிட்டுவருகின்றனர். ஸ்டாலின் தோல்வி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அவர், […]

இலங்கை செய்தி

தேசிய ஒற்றுமை உறுதிப்படுத்தப்படும்: கம்பன் விழாவில் ஜனாதிபதி உறுதி!

  • May 4, 2026
  • 0 Comments

அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடன் வாழும் நாடு தேவை என்றும், தேசிய ஒற்றுமைக்காக எடுக்கப்பட்ட உறுதியான நடவடிக்கைகளை எக்காரணம் கொண்டும் பின்வாங்க மாட்டோம் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் நேற்று (03) மாலை நடைபெற்ற “கம்பன் விழா”வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். தமிழ் மக்களின் முக்கிய இலக்கிய மற்றும் கலாச்சார விழாவான கம்பன் விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி பாரம்பரிய இந்து சம்பிரதாயங்களுடன் வரவேற்கப்பட்டார். இதன் போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனுக்கு £78 பில்லியன் கடன் திட்டத்தில் இணைவது குறித்து பிரிட்டன் ஆலோசனை

  • May 4, 2026
  • 0 Comments

ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் சுமார் £78 பில்லியன் பவுண்ட் கடன் திட்டத்தில் இணைவது, ஐரோப்பிய கூட்டமைப்புடனான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என பிரதமர் Starmer தெரிவித்துள்ளார். ஆர்மீனியாவில் நடைபெறவுள்ள ஐரோப்பிய அரசியல் சமூக (EPC) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்கு முன்னதாக அவர் இதனைத் தெரிவித்துள்ளதார் அத்துடன் பிரித்தானியாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் பிரதமர் கூறியுள்ளார். இந்த உதவி திட்டம் உக்ரைனின் பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், பிரித்தானிய நிறுவனங்களுக்கு எதிர்கால ஒப்பந்த வாய்ப்புகளையும் வழங்கும் […]

இந்தியா

எனக்கு தலைவர் அவர் தான் – விஜயின் தந்தை பேட்டி!

  • May 4, 2026
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வரும் நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜயின் தந்தை சந்திரசேகர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார். “எவ்வளவோ எதிர்ப்புகளை, சோதனைகளை தாண்டி விஜய் வந்துள்ளார். ஒரு அப்பாவாக ரொம்ப சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது. இதைவிட என்ன வேணும்? நான் 125 இடங்களில் வெற்றி பெறுவார் என நினைத்தேன். விஜயை தங்களது குடும்பத்தில் ஒருவராக தமிழக மக்கள் பார்க்கின்றனர். எனக்கு தலைவர் அவர்தான். நான் தொண்டன்தான்” எனத் தெரிவித்துள்ளார்.

அரசியல் இலங்கை செய்தி

மாலைதீவு ஜனாதிபதிக்கு அநுர தலைமையில் அமோக வரவேற்பு!

  • May 4, 2026
  • 0 Comments

இலங்கைக்கு வருகை தந்துள்ள மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவை (Dr. Mohamed Muizzu) வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மாலைதீவு மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார, கலாசார மற்றும் சமூக உறவுகளை மேலும் மேம்படுத்துவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முகக் கூட்டாண்மையை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு இந்த அரச பயணத்தை மேற்கொள்கிறார். மாலைதீவு […]

இலங்கை உலகம்

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

  • May 4, 2026
  • 0 Comments

பிலிப்பைன்ஸின் சமர் பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வு 10 கி.மீ (6.2 மைல்கள்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது. இதனால் சேதங்களும், அதைத் தொடர்ந்த பின் அதிர்வுகளும் ஏற்படக்கூடும் என பிலிப்பைன்ஸின் நில அதிர்வு ஆய்வு நிறுவனமான ஃபைவோல்க்ஸ் (Phivolcs) எச்சரித்துள்ளது.

இந்தியா செய்தி தமிழ்நாடு

எம்.ஜி.ஆரின் சாதனையை முறியடித்தார் விஜய்!

  • May 4, 2026
  • 0 Comments

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய நிலைவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 110 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. தஞ்சை உட்பட 4 தொகுதிகளில் தமிழக வெற்றிக்கழகம் வெற்றிபெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் தனித்து ஆட்சியமைப்பதற்குரிய சூழல் உதயமாகும் என்ற நம்பிக்கை உள்ளதால், அடுத்தக்கட்ட நகர்வுகளை தொடர்பில் தவெக தலைவர் விஜய் ஆலோசனை நடத்திவருகின்றார் என தகவல் வெளியாகியுள்ளது. 10 வரையான தொகுதிகளில் 2ஆம் இடத்தில் உள்ள தவெக , முதலிடம் வருவதற்கு 1000 வரையிலான வாக்கு வித்தியாசமே […]

உலகம் செய்தி

“Project Freedom” – அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!

  • May 4, 2026
  • 0 Comments

அமெரிக்கா தனது கப்பல்களைப் பாதுகாக்க ஹார்முஸ் நீரிணைப் பகுதிக்குள் நுழைந்தால், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது. ஹார்முஸ் நீரிணை பாதை முழுவதும் ஈரானிய படைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அங்கு நுழையும் வெளிநாட்டுப் படைகளைத் தாங்கள் எதிர்க்கப் போவதாகவும் மேஜர் ஜெனரல் அலி அப்துல்லாஹி தெரிவித்துள்ளார். அமெரிக்கா “Project Freedom” என்ற திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் போர் விமானங்களை அந்தப் பகுதியில் நிறுத்தத் தயாராகிவரும் நிலையிலேயே ஈரான் இந்த எச்சரிக்கையை […]

உலகம் செய்தி

‘Project Freedom’; 15,000 படையினரை களமிறக்கும் அமெரிக்கா!

  • May 4, 2026
  • 0 Comments

‘Project Freedom’ என்ற பெயரில் ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் புதிய நடவடிக்கையை அமெரிக்க இராணுவம் தொடங்கியுள்ளது. இதற்காக சுமார் 15,000 படைவீரர்கள் மற்றும் 100 போர் விமானங்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அமெரிக்காவின் மத்திய கட்டளைப் பணியகம் தெரிவித்துள்ளது. உலகளாவிய எரிசக்தி வர்த்தகத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணையில் , சரக்கு போக்குவரத்தை தடையின்றி பராமரிப்பது உலகப் பொருளாதாரத்திற்கு அவசியமானது என்று அட்மிரல் பிராட் கூப்பர் குறிப்பிட்டுள்ளார். பிராந்திய […]