ஜெர்மனியில் அதிகரிக்கும் டெங்கு தொற்றாளர்கள்!! வைத்தியர்கள் எச்சரிக்கை!
ஜெர்மனியில் டெங்கு நுளம்புகள் சீராக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் (Rhine-Westphalia) இதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதுவரை, பான், யூஸ்கிர்சென் மற்றும் ரைன்-எர்ஃப்ட் மாவட்டங்களில் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அதேநேரம் வரும் மாதங்களில் இந்த வெப்பமண்டல நுளம்புகள் பெருகக்கூடும் என்று கொலோன் நகரமும் தற்போது எச்சரித்துள்ளது.
இந்த நுளம்புகள் டெங்கு மற்றும் சிக்கன்குனியா போன்ற நோய்களைப் வேகமாக பரப்புவதால், சுகாதார அதிகாரிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நுளம்புகள் வெப்பமான வானிலையில் வேகமாக பரவும் என்பதும் குறிப்பிடத்தக்கது.




