அடுத்த தேர்தலில் பாரிய தோல்வியை சந்திக்கும் தொழிற்கட்சி!
பிரித்தானியாவில் நடப்பு அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பு நிலையை சமீபத்திய கருத்துக் கணிப்பொன்று வெளிப்படுத்தியுள்ளது.
புதிய YouGov நடத்திய கருத்துக்கணிப்பில், அடுத்த தேர்தலில் சீர்திருத்தக் கட்சி ஆட்சியமைக்க அதிக வாய்ப்பை கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
சீர்திருத்தக் கட்சி 24 சதவீதத்துடன் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து கன்சர்வேடிவ் கட்சி 19 சதவீதத்துடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன.
தொழிற்கட்சி 17 சதவீதத்துடன் நான்காம் இடத்திற்குச் சரிந்துள்ளது; 18 சதவீத வாக்குகளைப் பெற்ற பசுமைக் கட்சியை விட நடப்பு அரசாங்கம் பின்தங்கியுள்ளது.
சர் கெய்ர் ஸ்டார்மரின் தலைமைத்துவத்தைப் பாதிக்கக்கூடிய, முக்கியமான உள்ளாட்சி மற்றும் அதிகாரப் பகிர்வுத் தேர்தல்களுக்குச் சில வாரங்களுக்கு முன்பு இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய பொருளாதார நிலை, பாதுகாப்பு அச்சுறுத்தல், இராணுவத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு மற்றும் பிரெக்ஷிட் தொடர்பான தொழிற்கட்சி அரசாங்கத்தின் நடவடிக்கை ஆகியன மக்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




