உலகம் செய்தி

ஈரான் ஒருபோதும் அடிபணியாது!

அமெரிக்கா அல்லது இஸ்ரேலின் எவ்விதமான அச்சுறுத்தல்களுக்கும் ஈரானிய மக்கள் ஒருபோதும் அடிபணிய மாட்டார்கள் என அந்நாட்டு ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் Masoud Pezeshkian திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

தமது நாடு ஏனைய நாடுகளுடன் ஆக்கபூர்வமான பேச்சுகளை நடத்தவே விரும்புகிறது எனவும், போரை ஈரான் வலிந்து விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் மீண்டும் அமைதி பேச்சு நடத்தப்படுவதற்குரிய சாத்தியம் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ள நிலையிலேயே, ஈரான் தரப்பில் இருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எனினும், ஈரான் பேச்சுக்கு தயாரா என்பது பற்றி அந்த தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

தேசிய இறையாண்மையை பாதுகாப்பதில் ஈரான் உறுதியாக உள்ளது என அந்நாட்டு பிரமுகர்கள் இடித்துரைத்துள்ளனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி