உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தில் சமரி அதபத்து!
உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் வீரர்கள் ஆலோசனைக் குழு உறுப்பினராக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி தலைவி சமரி அத்தபத்து நியமிக்கப்பட்டுள்ளார்.
தனது நியமனம் குறித்து கருத்து வெளியிட்ட அத்தபத்து,
உலகளாவிய ஆலோசனைக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெருமை அடைவதாகக் கூறியுள்ளார்.
‘உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் வீரர்கள் ஆலோசனைக் குழுவில் நியமிக்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. இது எனக்கு தனிப்பட்ட முறையில் மட்டுமல்ல, இலங்கைக்கும் ஆசிய கிரிக்கெட் சமூகத்திற்கும் ஒரு பெருமைக்குரிய தருணம்’ என குறிப்பிட்டுள்ளார்.





