உலகம் செய்தி

ஈரானின் யூரேனியம் செறிவூட்டலுக்கு ரஷ்யா ஆதரவு!

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளே காரணம் என்று ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் Sergey Lavrov குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே சமரச பேச்சுகள் தொடர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஈரானின் அணுசக்தித் திட்டம் ராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படவில்லை என்ற சர்வதேச அணுசக்தி முகமையின் நிலைப்பாட்டையும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் தொடர்பான எந்தவொரு சுமுகமான தீர்வையும் ரஷ்யா ஆதரிக்கும்.

பிராந்திய அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா யதார்த்தமான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் தற்போது சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி