இலங்கை செய்தி

திருமலையில் சோகம்!விபத்தில் இளைஞன் பலி

  • April 20, 2026
  • 0 Comments

திருகோணமலை கப்பல்துறை பகுதியில் வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் மாட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் பலியாகியுள்ளார். நேற்றிரவு இடம்பெற்றுள்ள இவ்விபத்தில் திருகோணமலை நடேசன் கோயில் அடியில் வசித்து வரும் எஸ். நிரோஜன் (36 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த திருகோணமலை -கப்பல்துறை பகுதியைச் சேர்ந்த ஜீவராணி (47வயது) கை உடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து […]

உலகம்

பாகிஸ்தான் செல்லும் அமெரிக்க குழு!

  • April 20, 2026
  • 0 Comments

அமெரிக்க – இஸ்ரேல் ஈரான் மீதான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்கள் இன்று (19) பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்குப் பயணிப்பார்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்ட பதிவில், இஸ்லாமாபாத்தில் ஈரானிய பேச்சுவார்த்தையாளர்களுடன் நடைபெறவுள்ள இரண்டாவது சுற்று நேரடிப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா எந்த அதிகாரிகளை அனுப்பும் என்ற விபரங்களை அவர் வெளியிடவில்லை. கடந்த வார இறுதியில் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தலைமையிலான அமெரிக்கத் தூதுக்குழுவினர் மேற்கொண்ட […]

விளையாட்டு

லக்னோவை பந்தாடியது பஞ்சாப் கிங்ஸ்!

  • April 20, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 29-வது லீக் ஆட்டத்தில் 54 ஓட்டங்களால் Punjab Kings அணி வெற்றிபெற்றுள்ளது. முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற Lucknow Super Giants அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் பிரியான்ஷ் ஆர்யா மற்றும் கூப்பர் கான்னொலி ஆகியோர் லக்னோ பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 254 […]

உலகம் செய்தி

ஈரான் கப்பலை சிறைபிடித்தது அமெரிக்கா!

  • April 20, 2026
  • 0 Comments

ஈரானிய சரக்குக் கப்பலான டூஸ்கா (Touska) அமெரிக்கக் கடற்படையால் வளைகுடாப் பகுதியில் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கடல்வழித் தடையை மீற முயன்ற இந்தக் கப்பலின் இயந்திரப் அறையைச் சேதப்படுத்தி அமெரிக்கப் படைகள் அதைக் கைப்பற்றியுள்ளன. இந்தச் செயலை ஆயுதம் ஏந்திய கொள்ளைச் சம்பவம் என்று ஈரான் விமர்சித்துள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தைக்காகத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழு பாகிஸ்தான் செல்லவிருந்த நிலையில் இந்த மோதல் வெடித்துள்ளது. ஈரான் மற்றும் […]

இலங்கை செய்தி

சீதையம்மனை வழிபட நுவரெலியா செல்கிறார் இந்திய துணை ஜனாதிபதி!

  • April 20, 2026
  • 0 Comments

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன், இன்று (20) நுவரெலியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். இந்திய உதவியுடன் நுவரெலியாவில் முன்னெடுக்கப்படும் வீட்டுத் திட்டங்களை அவர் பார்வையிடவுள்ளார். மக்களையும் சந்திக்கவுள்ளார். நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் வழிபாட்டிலும் ஈடுபடவுள்ளார். இலங்கைக்கு நேற்று பயணம் மேற்கொண்ட இந்திய துணை ஜனாதிபதி இன்று மாலை தாயகம் திரும்புவார்.

உலகம் முக்கிய செய்திகள்

லூசியானாவில் துப்பாக்கிச் சூடு: 8 சிறுவர்கள் பலி

  • April 20, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 8 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். லூசியானாவின் தெற்கு ஸ்ரீவ்போர்ட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (19) இந்தத் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. மூன்று வீடுகளின் மீது மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில் 1 முதல் 14 வயதுக்குட்பட்ட 8 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் அங்கிருந்து வாகனமொன்றைக் கடத்தித் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இதன்போது பொலிஸார் அவரைத் துரத்திச் சென்று சுட்டதில், அவரும் உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்த சிறுவர்களில் சிலருக்கு குறித்த […]

உலகம் செய்தி

தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தடுப்பு அகற்றப்பட்டது

  • April 19, 2026
  • 0 Comments

லெபனான் தெற்கு பகுதியில், டயர் நகரை இணைக்கும் முக்கிய வீதியில் அமைக்கப்பட்டிருந்த இஸ்ரேலிய மண் தடுப்பு ஒன்றை லெபனான் இராணுவம் அகற்றியுள்ளது. இது குறித்து லெபனான் ஆயுதப் படைகள் X  தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், இந்த பணியில் ஒரு சிறப்பு இராணுவப் பிரிவு ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், அப்பகுதியில் ஒரு கண்காணிப்பு மையமும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும், டயர்–ஃபல்சியே பகுதிகளை இணைக்கும் பாலத்தின் புனரமைப்புப் பணிகளின் ஒரு பகுதியாக, வாகனங்கள் செல்லும் வகையில் தற்காலிக சிமெண்டு […]

உலகம் செய்தி

மொராக்கோவில் பலஸ்தீன ஆதரவு பேரணி – இஸ்ரேலிய மரண தண்டனைச் சட்டத்திற்கு எதிர்ப்பு

  • April 19, 2026
  • 0 Comments

மொராக்கோ தலைநகரான ரபாத் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் பலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேல் கொண்டு வர முயற்சிக்கும் புதிய மரண தண்டனைச் சட்டத்திற்கு எதிராகவும் பேரணி நடத்தினர். முகமது V அவென்யூவில் சுமார் 5,000 பேர் கூடினர். அவர்கள் பலஸ்தீன மற்றும் மொராக்கோ தேசியக் கொடிகளை ஏந்தி, மரண தண்டனைக்கு எதிராகவும், காசாவில் நடைபெறும் போருக்கு எதிராகவும் முழக்கமிட்டனர் என செய்தியாளர்கள் தெரிவித்தனர். இந்தப் போராட்டம் “பலஸ்தீனத்திற்கான தேசிய நடவடிக்கைக் குழு” என்ற அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் […]

இந்தியா செய்தி

விஜய், சங்கீதா இடையேயான வழக்கு – தேர்தலுக்கு முன் விவாகரத்து ?

  • April 19, 2026
  • 0 Comments

தவெக தலைவரும், நடிகருமான விஜயிடமிருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரிய வழக்கு நாளை 20ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது. சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக்கு மத்தியில், தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நாளை  விசாரணைக்கு வரவுள்ளது. விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணைக்காக நாளை (20) நேரில் ஆஜராகுமாறு விஜய்க்கு […]

இலங்கை செய்தி

இந்திய துணை ஜனாதிபதியை சந்தித்த தமிழ்க் கட்சிகள்

  • April 19, 2026
  • 0 Comments

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியத் துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன், இலங்கையின் தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் மலையக தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளை இன்று (19) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள்  பங்கேற்றுள்ளனர். இதேவேளை மலையக தமிழ்க் கட்சிகளின் சார்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் […]

error: Content is protected !!