இந்தியா செய்தி

விஜய், சங்கீதா இடையேயான வழக்கு – தேர்தலுக்கு முன் விவாகரத்து ?

தவெக தலைவரும், நடிகருமான விஜயிடமிருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரிய வழக்கு நாளை 20ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது.

சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக்கு மத்தியில், தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நாளை  விசாரணைக்கு வரவுள்ளது.

விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணைக்காக நாளை (20) நேரில் ஆஜராகுமாறு விஜய்க்கு ஏற்கனவே நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருந்தது.

இரு தரப்பு வழக்கறிஞர்களும் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், இருவரும் பரஸ்பரம் பிரிந்து விடுவது என சுமூக முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

வாழ்நாள் ஜீவனாம்சம், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான சொத்து பாகப்பிரிவினைகள் குறித்தும் ஏற்கனவே பேசி முடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் தேர்தல் பணிகள், பாதுகாப்பு காரணங்களால் விஜயும் சங்கீதாவும் காணொளி காட்சி வழியாக நீதிமன்றத்தில் ஆஜராவார்கள் என கூறப்படுகிறது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!