லக்னோவை பந்தாடியது பஞ்சாப் கிங்ஸ்!
IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 29-வது லீக் ஆட்டத்தில் 54 ஓட்டங்களால் Punjab Kings அணி வெற்றிபெற்றுள்ளது.
முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற Lucknow Super Giants அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் பிரியான்ஷ் ஆர்யா மற்றும் கூப்பர் கான்னொலி ஆகியோர் லக்னோ பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.
பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 254 ஓட்டங்களைப் பெற்றது.
255 என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய லக்னோ சூப்பர் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது.
இதற்கமைய பஞ்சாப் கிங்ஸ் அணி 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் தனது முதலிடத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.




