மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு டெல்லி வலியுறுத்து!
மாகாண சபைத் தேர்தலை மேலும் காலம் தாழ்த்தாமல் நடத்தும்படி இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவைத் தாம் நேரில் சந்தித்துப் பேசிய போது கேட்டுக்கொண்டார் என இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கின்றார். தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் ஏழு பேரை நேற்றுப் பிற்பகல் கொழும்பில் சந்தித்த சமயமே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார். இலங்கையின் இனப் பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வு ஒன்றே நியாயமானதாகவும், நின்று, நிலைத்து, நீடிக்க கூடியதாகவும் இருக்கும் என்பதை தமிழர் தரப்பு பிரதிநிதிகள் […]













