இயேசு கிறிஸ்து சிலை சிதைப்பு: விசாரணைகள் ஆரம்பம்
லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு இடையே, இஸ்ரேலிய வீரர் ஒருவர் இயேசு கிறிஸ்துவின் சிலையினைச் சுத்தியலால் அடித்துச் சிதைக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து பல்வேறு விவாதங்கள் எழும்பி வருகின்றது.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய இப் படம் சமீபத்தில் எடுக்கப்பட்டதா என்பது குறித்தும் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.






