இலங்கை

கிரகரி வாவி சுற்றுலா படகு சேவையை முறைமைப்படுத்த திட்டம்

நுவரெலியா கிரகரி வாவியின் சுற்றுலா படகு சேவையை முறைமைப்படுத்தி முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என நுவரெலியா மாநகர முதல்வர் உபாலி வனிகசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று (19) சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் விபத்துக்குள்ளானதை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று, அதிவேகமாக வந்த மற்றொரு படகுடன் மோதி விபத்துக்குள்ளானதில், சுற்றுலாப் பயணிகள் பயணித்த படகு கிரகரி வாவியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

எவ்வாறாயினும், அங்கிருந்த ஏனைய படகு ஓட்டுநர்கள் உடனடியாகச் செயற்பட்டு, அந்த இரு சுற்றுலாப் பயணிகளையும் படகு ஓட்டுநரையும் எவ்வித பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக இரு படகு ஓட்டுநர்களும் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களுக்கு எதிராக நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Mahi

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!