ஈரான் விமான நிலையங்கள் 95 சதவீதம் பாதுகாப்பாக உள்ளன!
ஈரானின் விமான நிலையங்களில் சுமார் 95 சதவீதம் அப்படியே இருப்பதாகவும், செயல்பாட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிறுவனங்கள் சங்கத்தின் செயலாளரை மேற்கோள் காட்டி, இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதேநேரம் சுமார் 20 20 விமானங்கள் மட்டுமே கடுமையாக சேதமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வணிக விமானப் போக்குவரத்திற்காக ஈரான் தனது வான்வெளியை மீண்டும் திறக்கத் தயாராகி வரும் வேளையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.





