நெதன்யாகு மீதான வழக்கு விசாரணை இரத்து!
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஊழல் வழக்கில் இந்த வாரம் நடைபெறவிருந்த விசாரணையை ஜெருசலேம் நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.
“பாதுகாப்பு மற்றும் ராஜதந்திர” காரணங்களை மேற்கோள்காட்டி நெதன்யாகு விசாரணையை இரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
பெஞ்சமின் நெதன்யாகு 2019-ஆம் ஆண்டு முதல் மூன்று ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணையை எதிர்கொண்டுள்ளார்.
அவரது நீதிமன்ற வருகைகள் பலமுறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது இரத்து செய்யப்பட்டுள்ளது.
காசா, லெபனான் மற்றும் ஈரான் மீதான இஸ்ரேலின் போர்களில் நடந்த நிகழ்வுகளுடன் இந்த ஒத்திவைப்புகளும் தடங்கல்களும் பெரும்பாலும் தொடர்புபடுத்தப்படுகின்றன.
அதேநேரம் விசாரணைகளில் கலந்துகொள்வதைத் தவிர்க்க நெதன்யாகு அவற்றை ஒரு காரணமாக பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.





