உலகம் செய்தி

ஈரான்மீதான போரால் சரியும் ட்ரம்பின் செல்வாக்கு!

ஈரான்மீதான போர் நடவடிக்கை காரணமாக மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இழந்துவருகின்றார்.

NBC நடத்திய கருத்து கணிப்பில் இவ்விடயம் தெரியவந்துள்ளது.

ஈரான்மீதானபோரை டிரம்ப் கையாண்ட விதம் காரணமாக அவரது ஆதரவு மதிப்பீடு 37 சதவீதமாகக் குறைந்துள்ளது.

அமெரிக்கர்களில் பெரும்பான்மையானோர் அவரது செயல்பாடுகளை ஏற்கவில்லை என்பதுடன், நாட்டின் இராணுவ நடவடிக்கைகளுக்கு வலுவான எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக, 30 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் ஈரானுக்கு எதிரான போரைத் தொடர்வதை மிகத் தீவிரமாக எதிர்க்கின்றனர்.

அதேவேளை, பெரும்பாலான குடியரசுக் கட்சியினர் ட்ரம்புக்கு ஆதரவளித்தாலும், ஜனநாயகக் கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.

எனினும், ஈரானில் இராணுவத் தலையீடுகள் செய்வதை பெரும்பாலான அமெரிக்க மக்கள் விரும்பவில்லை என்பதை கருத்து கணிப்பு முடிவு வெளிப்படுத்தியுள்ளது.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!