உலகம் செய்தி

ஈரான்–அமெரிக்கா பேச்சுவார்த்தை: முற்றுகையை நீக்க வேண்டும் என ஈரான் வலியுறுத்தல்

ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான ஈரானிய தூதர், இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர வேண்டுமானால், அமெரிக்கா ஈரானிய துறைமுகங்கள் மீதான தனது முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அவர் பிபிசி ரேடியோ 4 நிகழ்ச்சியில்‌ கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையில், அந்த முற்றுகை போர் நிறுத்த ஒப்பந்தத்தின் குறிப்பிடத்தக்க மீறல் என்று கூறினார். மேலும், மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கும்போது ஈரானின் உரிமைகள் மற்றும் நியாயமான கோரிக்கைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும், அமெரிக்காவிடமிருந்து ஒரு யதார்த்தமான அணுகுமுறை தேவை என்றும் வலியுறுத்தினார்.

“எதிர்தரப்பு ஈரானைத் தாக்குவதற்கு மேலும் தயாராகுவதற்காக பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை” என்றும் அவர் கூறினார்.

முன்னதாக,  அமெரிக்க ஜனாதிபதி தேவையானால் அமெரிக்கப் படைகள் மீண்டும் நடவடிக்கைகளை தொடங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இதனிடையே, ஈரானின் உள் தலைமைப் பகுதியில் பிளவு இருப்பதாக கூறப்படும் கருத்துகளை அந்த தூதர் நிராகரித்துள்ளார். மாறாக, பிரச்சினை ஈரானில் அல்ல, முரண்பாடுகள் மற்றும் பிளவுகள் நிறைந்த அமெரிக்காவில்தான் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!