ஐரோப்பா

தொழிலாளர்களுக்கு வரி விலக்கு – ஜெர்மனியில் புதிய சட்டம்!

தொழிலாளர்களுக்கான வரி விலக்கு,  நிவாரண ஊக்கத்தொகை மற்றும் எரிபொருள் தள்ளுபடி ஆகியவற்றை உள்ளடக்கிய  திட்டத்திற்கு ஜெர்மனியின் நாடாளுமன்றத்தின் கீழ்சபை ஒப்புதல் அளித்துள்ளது.

ஈரான் போர்  காரணமாக அதிகரித்த பெட்ரோல் விலைகளின் தாக்கத்தைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் தள்ளுபடியானது, டீசல் மற்றும் பெட்ரோலுக்கான எரிசக்தி வரியில் ஒரு லிட்டருக்கு சுமார் 0.17 யூரோக்கள் என்ற குறைப்பை வழங்குகின்றது.

அத்துடன் இந்த சட்டத்தின்மூலம் தொழிலாளர்கள் தங்களது முதலாளிகளிடமிருந்து 1,000 யூரோக்கள் வரையிலான தன்னார்வ வரி விலக்கு ஊக்கத்தொகையைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை நிவாரணத்தின் மதிப்பு 1.6 பில்லியன் யூரோக்கள் ஆகும். அதே நேரத்தில், தொழிலாளர் ஊக்கத்தொகையால் ஏற்படும் வரி வருவாய் இழப்பு குறைந்தது 2.8 பில்லியன் யூரோக்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஜெர்மனி அரசாங்கத்தின் இந்த புதிய சட்டமூலம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!