இந்தியா

டெல்லியுடன் உறவை வலுப்படுத்த டாக்கா பச்சைக்கொடி!

  • February 14, 2026
  • 0 Comments

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பங்களாதேஷ் தேசியவாத கட்சி Bangladesh Nationalist Party நன்றி தெரிவித்துள்ளது. பங்களாதேஷ் தேர்தல் முடிவுகளை அங்கீகரித்ததற்காகவும், தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்ததற்காகமே தேர்தலில் வென்ற கட்சி இவ்வாறு நன்றி கூறியுள்ளது. பங்களாதேஷ் பொதுத்தேர்தலில் மொத்தமுள்ள 299 இடங்களில், பங்களாதேஷ் தேசியவாத கட்சி BNP தலைமையிலான கூட்டணி 212 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள பிஎன்பி கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கு Tariq Rahman வாழ்த்துகள் […]

உலகம்

கிரீன்லாந்தில் ஆட்சி நடத்துவது பற்றி உயர் மட்ட தலைவர்களுக்கு இடையில் கலந்துரையாடல்!

  • February 14, 2026
  • 0 Comments

கிரீன்லாந்தில் ஆட்சி நடத்துவது குறித்து டென்மார்கின் பிரதமரும், கீரீன்லாந்தின் பிரதமரும், அமெரிக்க அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். நேற்று இடம்பெற்ற மியூனிக் பாதுகாப்பு மாநாட்டின் போது அமெரிக்க  வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவை சந்தித்து இரு அதிகாரிகளும் 15 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்பின்போது கிரீன்லாந்தின் நலன்கள் மீண்டும் ஒருமுறை தெளிவாக எடுத்துரைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேற்படி சந்திப்பு தொடர்பில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள டென்மார்க் பிரதமர் ஃபிரடெரிக்சன் (Frederiksen), ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாகவும், “உயர் […]

உலகம்

கியூபாவில் எரிபொருள் பதப்படுத்தும் ஆலையில் தீ விபத்து – சிக்கலில் அரசாங்கம்!

  • February 14, 2026
  • 0 Comments

கியூபா தலைநகர் ஹவானாவில் (Havana)  உள்ள ஒரு முக்கிய எரிபொருள் பதப்படுத்தும் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே  எண்ணெய் பற்றாக்குறையால் நெருக்கடியில் சிக்கியுள்ள கியூபாவிற்கு இந்த சம்பவம் பேரிடியாக அமைந்துள்ளது. நிக்கோ லோபஸ் (Nico Lopez) சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து ஹவானா (Havana) விரிகுடாவிற்கு மேலே ஒரு பெரிய புகை மூட்டம் எழும் காணொளிகள் சமூக வலைத்தளம் முழுவதும் வியாபித்துள்ளன. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கியூபாவின் எரிசக்தி மற்றும் சுரங்க அமைச்சகம், சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள […]

செய்தி

ICC World Cup: இன்று நடைபெறும் மும்முனைச் சமர்!

  • February 14, 2026
  • 0 Comments

ICC World Cup தொடரில் இன்று (17 ) மூன்று லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. Colombo (SSC) மைதானத்தில் நடைபெறும் 22 ஆவது லீக் ஆட்டத்தில் Ireland மற்றும் Oman அணிகள் மோதுகின்றன. தங்களின் பிரிவில் முன்னிலைப் பெற இரு அணிகளும் வெற்றியை கட்டாயமாக குறிவைத்து களமிறங்குகின்றன. கொல்கத்தா Eden Gardens இல் நடைபெறும் அடுத்த 23 ஆவது லீக் ஆட்டத்தில் England மற்றும் Scotland அணிகள் பலத்த சவாலை ஏற்படுத்துகின்றன. அனுபவம் வாய்ந்த இங்கிலாந்தை […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவை உலுக்கியுள்ள சம்பவம்: சுயாதீன விசாரணை கோரும் அமைப்புகள்!

  • February 14, 2026
  • 0 Comments

இஸ்ரேல் ஜனாதிபதியின் Isaac Herzog வருகைக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் போராட்டக்காரர்களை காவல்துறை அப்புறப்படுத்திய சம்பவம் ஆஸ்திரேலியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் Anthony Albanese தனது கவலையை வெளிப்படுத்தியதுடன், சம்பவம் குறித்து காவல்துறை தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஜனநாயக ரீதியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமை மக்களுக்கு இருந்தாலும், காவல்துறையின் ஆலோசனைகளை ஏற்பாட்டாளர்கள் பின்பற்றாதது […]

உலகம்

பாலஸ்தீனர்களின் பகுதியில் இஸ்ரேலிய குடியேறிகள் அட்டகாசம் : பலர் படுகாயம்!

  • February 14, 2026
  • 0 Comments

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பகுதியில் இஸ்ரேலிய குடியேறிகள் சொத்துகளை அழித்து சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அத்துடன் இந்த சம்பவத்தில் ஏராளமான பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர். வடமேற்குக் கரையில்  நப்லஸுக்கு (Nablus) தெற்கே உள்ள ஒரு கிராமமான தல்ஃபிட் (Talfit) அருகே  குறித்த தாக்குதல் நேற்று முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குடியேறிகளின் தாக்குதலைத் தடுக்க முயன்ற குடியிருப்பாளர்கள் மீது இஸ்ரேலிய துருப்புகள் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் வெடிமருந்துகளை வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்துடைப்பான அமைதி பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்ற […]

அரசியல் இலங்கை செய்தி

அறகலய தொடர்பில் எங்கள் ஆட்சியில் உயர்மட்ட விசாரணை: நாமல் திட்டவட்டம்!

  • February 14, 2026
  • 0 Comments

“ அறகலய தொடர்பிலும், அதற்காக வெளிநாடுகளில் இருந்து வந்த பணம் மற்றும் பின்புலம் தொடர்பில் எமது ஆட்சியில் ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். “நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறைவேற்றவில்லை. மறுபுறத்தில் தாம் கூறியது பொய் என்பது அம்பலமாகி வருகின்றது. ஆளுங்கட்சிக்குள் நடக்கும் ஊழல்களும் வெளிவருகின்றன. எனவே, தமது இருப்பைக்காக்க அரசாங்கம் அடக்குமுறையை பயன்படுத்துகின்றது.”- எனவும் […]

செய்தி

சமஷ்டி குறித்து சந்திப்பு: அழைப்பை நிராகரித்தது தமிழரசுக் கட்சி!

  • February 14, 2026
  • 0 Comments

ஒற்றையாட்சி அரசமைப்பு வரைபை நிராகரித்து, கூட்டாட்சி தீர்வை வலியுறுத்தித் தமிழ்த் தரப்புகள் ஒன்றிணைந்து செயற்பட விடுக்கப்பட்ட அழைப்பை இலங்கைத் தமிழரசுக் கட்சி ITAK நிராகரித்துள்ளது. தமிழ்த் தேசியப் பேரவையின் Tamil National Council ஏற்பாட்டில் நாளை ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு யாழ். நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இது தொடர்பான கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், Gajendrakumar Ponnambalam இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு இது தொடர்பில் கடிதம் […]

விளையாட்டு

கொழும்பில் நாளை ‘கிரிக்கெட் போர்’!

  • February 14, 2026
  • 0 Comments

  T-20 உலகக்கிண்ண தொடர்பில் பங்கேற்கவுள்ள இந்திய அணி India இலங்கை வந்துள்ளது. T-20 உலகக்கிண்ண தொடர்பில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் Pakistan அணிகள் மோதும் – ஒட்டுமொத்த உலகமும் எதிர்பார்க்கும் போட்டி நாளை (15) நடைபெறவுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாச Colombo (RPS) மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். உலக்கிண்ண தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் பங்கேற்காது என அந்நாடு அறிவித்திருந்தது. எனினும், இலங்கை முன்னெடுத்த இராஜதந்திர நகர்வுகளால் போட்டியில் […]

புகைப்பட தொகுப்பு

என் இனிய தனிமையே – அனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

  • February 13, 2026
  • 0 Comments

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி, இன்று தென்னிந்திய சினிமாவில் கதாநாயகியாக வலம் வருகிறார் அனிகா சுரேந்திரன். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை அனிகா எப்போதும் ஆக்டிவாக இருப்பார். தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் தொடர்ந்து பதிவு செய்து வரும் அனிகா, தற்போது விடுமுறை இல்லமொன்றில்  எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அமைதியினான இரண்டு நாட்கள் என அவர் கெப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!