இலங்கை செய்தி

தபால் சேவைக்கு 2,800 புதிய நியமனங்கள்

  • February 13, 2026
  • 0 Comments

தபால் சேவையில் நிலவிவரும் மனிதவள தேவையை நிவர்த்தி செய்ய 2,800 புதிய நியமனங்கள் வழங்கப்பட உள்ளதுடன் தற்போது கடமையாற்றிவரும் ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு அவசியமான  நடவடிக்கைகளும்  முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். தபால் சேவையை தற்காலத்திற்கு ஏற்ப நவீனமயப்படுத்தி, அதன் வினைத்திறனை மேம்படுத்தும் நோக்கில் 849 மில்லியன் ரூபா செலவிலான விசேட திட்டங்கள் வியாழக்கிழமை  தபால் தலைமையகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் […]

இலங்கை செய்தி

பாரியளவில் வௌிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி – இளைஞர்கள் இருவர் கைது

  • February 13, 2026
  • 0 Comments

அவுஸ்திரேலியாவில் வேலை வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்ட இரு இளைஞர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி நகரில் விசா ஆலோசனை மையம் ஒன்றை நடத்தி வருவதாகக் கூறி, அதன் ஊடாக அவுஸ்திரேலியாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி இவர்கள் பணமோசடி செய்துள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது. கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து 35 இலட்சம் ரூபாவைப் பெற்றுக்கொண்டு, அவருக்கு வாக்குறுதியளித்தபடி வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கவில்லை என பணியகத்திற்கு முறைப்பாடு […]

செய்தி தமிழ்நாடு

சேலத்தில் விஜய் கூட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு – தவெக கூறுவது என்ன?

  • February 13, 2026
  • 0 Comments

தமிழகத்தின் சேலத்தில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் உடல்நல பாதிப்பால் உயிரிழந்த நிலையில் தவெக விளக்கம் அளித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள கே.வி.பி திடலில் தவெக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்ற நிலையில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றிருந்தனர். இந்தக் கூட்டத்தில் 1 மணியளவில் விஜய் உரையாற்ற தொடங்கினார். இதேவேளை, கூட்டம் நடைபெற்ற இடத்தில் கடுமையான வெயிலின் தாக்கம் காணப்பட்டது. இதனையடுத்து, பலர் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், […]

உலகம் செய்தி

அமெரிக்கா–தைவான் வர்த்தக புரட்சி :வரிகள் குறையும், முதலீடு பெருகும்

  • February 13, 2026
  • 0 Comments

ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள், தைவானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15% வரியை உறுதிப்படுத்தும் புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதே சமயத்தில், அமெரிக்காவின் பல பொருட்களுக்கு தைவான் வரிகளை குறைக்கும் அல்லது நீக்கும் திட்டத்தையும் ஒப்புக்கொண்டது. ஒப்பந்தம் 2025 ஆம் ஆண்டு முதல் 2029 ஆண்டு வரை அமெரிக்க பொருட்களின் கொள்முதலை அதிகரிக்கும், இதில் இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய், சிவில் விமானங்கள், இயந்திரங்கள்,  மற்றும் ஜெனரேட்டர்கள் அடங்கும். தைவானின் பொருளாதார மற்றும் தொழிற்சாலை வளர்ச்சிக்கு […]

அரசியல் இலங்கை செய்தி

“நாடாளுமன்றத்தை கொளுத்தவந்தவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை அவசியம்”

  • February 13, 2026
  • 0 Comments

அரகலயவின்போது நாடாளுமன்றத்தைக் கொளுத்துவதற்கு வந்தவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் SJP நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் S.M. Marikar வலியுறுத்தினார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியவை வருமாறு, “நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவை கொலை செய்த நபர்களுக்கு தண்டனை கிடைக்கப்பெற்றமை மகிழ்ச்சியளிக்கின்றது. […]

உலகம்

உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பல் மத்திய கிழக்கு கடற்பகுதியில் – அதிகரிக்கும் பதற்றம்!

  • February 13, 2026
  • 0 Comments

உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்ட் ( USS Gerald R Ford) மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.  இது அமெரிக்கா – ஈரான் உறவில் அதகரித்து வரும் பதற்றத்தை குறிக்கிறது. இந்த போர்க்கப்பல், துணை கப்பல்களுடன், வரும் நாட்களில் கரீபியன் தீவுக்கு புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் உறுதி செய்யப்படாவிட்டால், இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பலை அனுப்புவது குறித்து பரிசீலித்து வருவதாக ட்ரம்ப்  முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தார். […]

அரசியல் இலங்கை செய்தி

காங்கேசன்துறை துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்க திட்டம்: விமல் சீற்றம்!

  • February 13, 2026
  • 0 Comments

“காங்கேசன்துறை kankesanthurai harbour மற்றும் திருகோணமலை Trincomalee Harbour துறைமுகங்களை இந்தியாவுக்கு வழங்குவதற்குரிய முயற்சி எடுக்கப்பட்டுவருகின்றது. இது தேசத்துரோக நடவடிக்கையாகும்.” இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் National Freedom Front தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச Wimal Weerawansa தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். “ஜே.வி.பியின் செயலாளர் டில்வின் சில்வா இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார். எதிர்வரும் 19 ஆம் திகதி ஜனாதிபதியும் அங்கு செல்கின்றார். இலங்கையிலுள்ள கனிம வளங்களை இந்திய […]

இலங்கை

மட்டக்களப்பில் டித்வா புயலினால் கால்நடைகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு!

  • February 13, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தில் டித்வா புயலினால் சிக்கி இறந்த கால்நடைகளுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பணிப்பாளர் எம்.ஏ. ஹாதி அவர்களின் தலைமையில் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள மாநாட்டு மண்டபத்தில் இன்று (13) இடம் பெற்றது. டித்வா புயலினால் மாவட்டத்தில் 907 பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதனை முன்னிட்டு அரசாங்கத்தினால் அவர்களுக்கு 295 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு முதற்கட்டமாக ஆரையம்பதி, மட்டக்களப்பு, காத்தான்குடி, ஏறாவூர் பிரதேசங்களைச் சேர்ந்த நபர்களுக்கான காசோலைகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன. கிழக்கு […]

உலகம் செய்தி

காசாவில் படுகொலைகள் –  பிராந்திய பதற்றம் அதிகரிப்பு

  • February 13, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய பாதுகாப்பில், மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேறிகள் இன்று நடத்திய தாக்குதல்களில் சுமார் 54 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர். காசாவில் போர்நிறுத்தம் தொடர்வது பிராந்திய பதற்றத்தை குறைக்க உதவும்  என்று சீனா கூறியுள்ளது. இதேவேளை பிரித்தானியாவின் உயர் நீதிமன்றம், பலஸ்தீன போராட்டக் குழுவை “பயங்கரவாத அமைப்பு” என்று சட்டவிரோதமாக்கும் அரசாங்க முடிவு தவறானது என்று தீர்ப்பு அளித்துள்ளது. இரண்டு வருடங்களுக்கும் மேலாக நீடிக்கும் இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் காரணமாக சுமார்  72,045 பேர் உயிரிழந்துள்ளதுடன், 171,686 பேர் […]

விளையாட்டு

கனடாவை தோற்கடித்தது UAE அணி!

  • February 13, 2026
  • 0 Comments

கனடா Canada மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் United Arab Emirates அணிகளுக்கிடையிலான போட்டியில் கனடா அணி தோல்வி அடைந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் அணி ஐந்து விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. T 20 உலகக்கிண்ண தொடரில் இன்று (13) மாலை நடைபெற்ற 19-வது லீக் ஆட்டத்தில் UAE- கனடா அணிகள் மோதின. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற கனடா அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதற்கமைய களமிறங்கிய கனடா அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது. இறுதியில் கனடா அணி 20 […]

error: Content is protected !!