அரசியல் இலங்கை செய்தி

மஹிந்தவின் சகா ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கைது: பின்னணி என்ன?

  • January 5, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ Johnston Fernando இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளார். அரச வளங்களை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் FCID அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று எப்.சி.ஐ.டிக்கு ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ வரவழைக்கப்பட்டிருந்தார். வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னரே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சதொசவுக்கு லொறி உள்ளிட்ட வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜொன்ஸ்டர் […]

ஐரோப்பா

பிரிஜிட் மக்ரோன் தொடர்பில் அவதூறு கருத்துக்கள் – வழக்கு விசாரணை இன்று!

  • January 5, 2026
  • 0 Comments

பிரான்ஸின் முதன் பெண்மணியான பிரிஜிட் மக்ரோன் தொடர்பில்  ( Brigitte Macron) இணையவழியில் தவறான தகவல்களை பரப்பிய  10 குற்றவாளிகளுக்கு இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. குற்றவாளிகள் பிரிஜிட் மக்ரோனின்  பாலினம் மற்றும் குடும்ப வாழ்க்கை தொடர்பாக  தவறான தகவல்களை பரப்பியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் 41 தொடக்கம் 60 வயதுடைய எட்டு ஆண்களும், இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. குறித்த வழக்கு  கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. […]

அரசியல் இலங்கை செய்தி

அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக இன்று போராட்டம்!

  • January 5, 2026
  • 0 Comments

வெனிசுலாவுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையைக் கண்டித்து கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக இன்று (05) போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. முன்னிலை சோசலிசக் கட்சியாலேயே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி இன்று மாலை 4 மணிக்கு போராட்டம் நடத்தப்படும் என சமூகவலைத்தள பிரச்சாரமொன்றில் மேற்படி கட்சியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். வெனிசுலா விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டை நிறுத்துமாறும், இலத்தீன் அமெரிக்காவில் பரந்த தலையீடுகளை நிறுத்துமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜே.வி.பியின் இருந்து பிரிந்து சென்ற குழுவினராலேயே முன்னிலை சோசலிசக் கட்சி […]

உலகம்

வெனிசுலாவின் புதிய அரசாங்கத்தை எச்சரிக்கும் ட்ரம்ப் – மீண்டும் ஒரு தாக்குதலுக்கும் தயார்!

  • January 5, 2026
  • 0 Comments

வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டு தற்போது அமெரிக்காவின் பிடியில் உள்ள நிலையில், ட்ரம்ப் மேலும் ஒரு எச்சரிக்கையையும் விடுத்துள்ளார். வெனிசுலா அதன் எண்ணெய் தொழில் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான நடவடிக்கைகளில் அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு ஒத்துழைக்கத் தவறினால் மேலும் இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அச்சுறுத்தியுள்ளார். வெனிசுலாவின் தற்போதைய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodriguez) தலைமையிலான அரசாங்கம் அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு முரணாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்தே ட்ரம்ப் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் கடும் பனிப்பொழிவு: போக்குவரத்து மற்றும் கல்வி பாதிப்பு

  • January 5, 2026
  • 0 Comments

கிறிஸ்மஸ் விடுமுறை முடிந்து மக்கள் பணிக்குத் திரும்பியுள்ள நிலையில், பிரித்தானியாவின் பல பகுதிகளில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வடக்கு ஸ்கொட்லாந்தில் கடும் பனிப்பொழிவுக்கான ‘ஆம்பர்’ (Amber) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, அபெர்டீன் (Aberdeen) மற்றும் ஷெட்லாந்து (Shetland) பகுதிகளில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, வீதிகள் அபாயகரமாக இருப்பதால் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், கடும் குளிர் காரணமாக முதியவர்கள் மற்றும் நோயாளிகளின் உடல்நலனில் அதிக […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் வேலையின்மை அதிகரிக்கும் அபாயம்: ஆய்வில் எச்சரிக்கை

  • January 5, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் 2026-ஆம் ஆண்டில் வேலையின்மை விகிதம் பாரியளவில் அதிகரிக்கும் என ‘ரெசல்யூஷன் ஃபவுண்டேஷன்’ (Resolution Foundation) நிறுவனத்தின் புதிய ஆய்வு எச்சரித்துள்ளது. அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள், எரிசக்தி விலையேற்றம் மற்றும் குறைந்தபட்ச ஊதிய உயர்வு ஆகிய “மும்முனைத் தாக்குதல்களை” (Triple Whammy) எதிர்கொள்ள முடியாமல் திணறும் “ஸோம்பி” (Zombie) நிறுவனங்களின் வீழ்ச்சியே இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. சுமார் 15 ஆண்டுகளாகக் குறைந்த வருவாயில் இயங்கி வந்த இத்தகைய நிறுவனங்கள், தற்போதைய தொழில் செலவீனங்களைச் […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

கைது இல்லாமலே கைபேசி பறிமுதல்: பிரித்தானியாவின் புதிய நடவடிக்கை

  • January 5, 2026
  • 0 Comments

பிரித்தானியாவிற்குச் சிறு படகுகள் மூலம் வரும் அடைக்கலக் கோரிக்கையாளர்களின் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சிம் கார்டுகளைக் கைது நடவடிக்கை எதுவுமின்றி உடனடியாகப் பறிமுதல் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கென்ட் (Kent) பகுதியில் உள்ள மேன்ஸ்டன் (Manston) செயலாக்க மையத்திற்கு வரும் அகதிகள் இன்று முதல் இத்தகைய சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மனித கடத்தல்காரர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டுவதற்காக, அவர்களின் தொலைபேசி தரவுகளைப் பதிவிறக்கம் செய்ய நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. ஆடைச் சோதனை மட்டுமன்றி, சிம் கார்டுகள் […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

கிரீன்லாந்து விவகாரம்: அமெரிக்காவிற்கு டென்மார்க் கடும் கண்டனம்

  • January 5, 2026
  • 0 Comments

கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்த மிரட்டல்களை நிறுத்திக்கொள்ளுமாறு டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் (Mette Frederiksen), அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ட்ரம்ப்பின் உதவியாளரின் மனைவி கேட்டி மில்லர், அமெரிக்கக் கொடி போர்த்தப்பட்ட கிரீன்லாந்து வரைபடத்தைப் பகிர்ந்து “விரைவில்” (SOON) எனப் பதிவிட்டிருந்தார். இது டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து […]

அரசியல் இலங்கை செய்தி

“முதலில் ஜனாதிபதி பதவி விலகட்டும்” – நாமல் சர்ச்சை கருத்து

  • January 5, 2026
  • 0 Comments

“ முதலில் ஜனாதிபதியை பதவி விலகச் சொல்லுங்கள், பிறகு ஆட்சியை பொறுப்பேற்பது பற்றி கதைக்கலாம்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa எம்.பி. தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்றிரவு விசேட ஆன்மீக வழிபாடு இடம்பெற்றது. இந்நிகழ்வின் பின்னர் நாமல் ராஜபக்ச ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டார். இதன்போது அவரிடம் “ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவி விலகினால் நாட்டை பொறுப்பேற்க நாமல் ராஜபக்ச தயார்.” […]

உலகம்

சர்வதேச ரீதியில் தங்கத்தின் விலை 1.8 சதவீதத்தால் அதிகரிப்பு!

  • January 5, 2026
  • 0 Comments

வெனிசுலா  மீது ட்ரம்ப் முன்னெடுத்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை தொடர்ந்து உலகளாவிய ரீதியில் விலைமதிப்பற்ற உலோகங்களின் விலைகள்  அதிகரித்துள்ளன. இது புவிசார் அரசியல் அபாயங்கள் குறித்த முதலீட்டாளர்களின் கவலைகளை அதிகரித்துள்ளது. இன்படி ஆசியாவில் இன்றைய தினம் தங்கம்  அவுன்ஸ் ஒன்றின் விலை  சுமார் 1.8 சதவீதத்தால்  உயர்ந்து  $4,408 (£3,282) ஆக பதிவாகியுள்ளது. அதேபோல் வெள்ளி 3.5 சதவீதத்தால் உயர்ந்துள்ளது. இதற்கிடையில், கச்சா எண்ணெய் விலைகள் சிறிய அளவில் மாற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.