உலகம்

கிரீன்லாந்தில் என்ன இருக்கிறது?

  • January 9, 2026
  • 0 Comments

பூமியின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து, உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு வளமான இயற்கை வளங்களைக் கொண்டுள்ளது. இவற்றில் முக்கியமான மூலப்பொருட்களும் அடங்கும். லித்தியம் மற்றும் அரிய பூமி கூறுகள் (REEs) போன்ற முக்கியமான மூலப்பொருட்கள் உட்பட, குறிப்பிடத்தக்க ஹைட்ரோகார்பனையும் (hydrocarbon)  கொண்டுள்ளது. இந்த வளங்கள் பசுமை தொழில்நுட்பங்கள் மற்றும் உலகளாவிய ஆற்றல் மாற்றத்திற்கு மிக முக்கியமானவை. கிரீன்லாந்தின் ஹைட்ரோகார்பன் ஆற்றல் மற்றும் கனிம வளத்தின் அளவு,  குறித்து டென்மார்க் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் விரிவான ஆராய்ச்சிகளை […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ஏஐ துறையில் உலகை வழிநடத்த இந்தியா தயாராகிறது

  • January 9, 2026
  • 0 Comments

இந்திய செயற்கை நுண்ணறிவு, அதாவது ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், உலகளவில் முன்னணி இடத்தைப் பிடிக்க வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் நடைபெறவுள்ள “அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு – உலகளாவிய தாக்கம்” என்ற உச்சி மாநாட்டை முன்னிட்டு, இந்திய ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில், அவதார், பார்த்ஜென், ஃப்ராக்டல், கான், ஜென்லூப், இன்டெலிஹெல்த், சர்வம், டெக் மஹிந்திரா, ஜென்டீக் […]

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

ஸ்டைலிஷ் லுக்கில் திவ்ய பாரதி

  • January 9, 2026
  • 0 Comments

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டில் வெளியான ‘பேச்சுலர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை திவ்யபாரதி. தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே அதிக கிளாமருடன் நடித்து ஒட்டுமொத்த இளைஞர்கள் கூட்டத்தையும் தன் பக்கம் ஈர்த்துக்கொண்டார். இரசிகர்களின் விருப்பமான நடிகையாக வலம் வந்த திவ்யபாரதிக்கு ஒருகட்டத்தில் போதிய பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்தது. பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின் விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தில் சின்ன ரோலில் நடித்து […]

உலகம்

ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்தோர்!

  • January 9, 2026
  • 0 Comments

2026 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 28 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள்தொகை மையத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில்,  ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை வளர்ச்சி இந்த ஆண்டு 1.3 சதவீதமாக குறையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்தோர் வருகையில் ஏற்படும் குறைவு மற்றும் புலம்பெயர்ந்தோர் புறப்பாடு அதிகரிப்பால் இந்த மெதுவான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டில் நிகர வெளிநாட்டு இடம்பெயர்வு 260,000 ஆகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவிட்-19க்குப் பிறகு தற்காலிக விசாக்களில் […]

செய்தி தமிழ்நாடு

தவெக தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு நியமனம்

  • January 9, 2026
  • 0 Comments

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் குழுவினை அமைத்து அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தையும், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது. இதற்காக சிறப்பு குழு அமைக்கப்படுகிறது. இந்த குழு தமிழகம் முழுவதும் பொதுமக்கள் சிறு குறு தொழில் அமைப்புகள், தொழிலாளர் […]

இந்தியா

அடுத்த மாதம் முதலாம் திகதி வரவுசெலவுத் திட்டம் தாக்கல்

  • January 9, 2026
  • 0 Comments

இந்திய நாடாளுமன்ற வரவுசெலவுத் திட்ட கூட்டத்தொடர் எதிர்வரும் 28 ஆம் திகதி கூடுகிறது. அடுத்த நிதி ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ஆண்டின் முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் என்பதால் வழக்கம்போல் குடியரசுத் தலைவரின் உரையுடன் கூட்டத் தொடர் தொடங்கும் என நாடாளுமன்ற வரவுசெலவுத் திட்ட கூட்டத் தொடர் குறித்து நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவால் இறுதி செய்யப்பட்ட தற்காலிக அட்டவணையை மேற்கோள்காட்டி, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். […]

அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு மூன்று வாக்குகளை வழங்கும் மொட்டு கட்சி!

  • January 9, 2026
  • 0 Comments

“ பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளமை பொருத்தமான அரசியல் நடவடிக்கையாகும்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் Sagara Kariyawasam தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று (09) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பொருத்தமற்ற – நெறிமுறையற்ற அரசியல் நடவடிக்கையென ஆளுங்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையிலேயே மொட்டு கட்சி செயலாளர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். “ நம்பிக்கையில்லாப் […]

இலங்கை

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட அனர்த்த முன்னெச்சரிக்கை!

  • January 9, 2026
  • 0 Comments

அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அனர்த்த முன்னெச்சரிக்கை இன்று (09.01.2026) மாலை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள ஆழ்ந்த காற்றழுத்தம் நாளை மதியம் மற்றும் மாலை திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் கடந்து செல்ல வாய்ப்புள்ளது . அதனால், முல்லைத்தீவில் இன்று இரவு மற்றும் நாளை கனமழை மற்றும் கடுமையான காற்று நிலை ஏற்படலாம். நித்தகைக்குளம் மற்றும் தண்ணிமுறிப்பு பிரதேச வயல்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் மீனவர்கள் கடல் அலை உயர்வாக இருக்கும் அதனால் கரையோரப் பகுதியில் உள்ள மீன்பிடி […]

உலகம்

திமிர்பிடித்த” அமெரிக்கத் தலைவர் தூக்கியெறியப்படுவார் – அலி கமேனி!

  • January 9, 2026
  • 0 Comments

தெஹ்ரானில் வளர்ந்து வரும் போராட்டங்களை கட்டுப்படுத்த போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் கடுமையாக தாக்குவேன் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், ஈரானின் உச்ச  தலைவர் அயதுல்லா அலி கமேனி ( Ayatollah Ali Khamenei ) ட்ரம்ப் “தனது சொந்த நாட்டை நடத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். ஆட்சிக்கு எதிராக மக்கள் தெருக்களில் இறங்கி போராடுவதற்கு எதிராக ஈரான் அரசு நடவடிக்கை எடுக்கும் எனக் குறிப்பிட்ட அவர், ட்ரம்ப் “ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈரானியர்களின் […]

அரசியல் இலங்கை செய்தி

11 ஆம் திகதி இலங்கை வருகிறார் சீன வெளிவிவகார அமைச்சர்: உறுதிப்படுத்தியது அரசு!

  • January 9, 2026
  • 0 Comments

சீன வெளிவிவகார அமைச்சர் Wang Yi எதிர்வரும் 11 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார் என்பதை இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath உறுதிப்படுத்தியுள்ளார். எதிர்வரும் 12 ஆம் திகதி சீன வெளிவிவகார அமைச்சர் தன்னை சந்தித்து பேச்சு நடத்துவார் எனவும் அவர் கூறினார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அமைச்சர் மேற்படி தகவலை வெளியிட்டார். சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி எதிர்வரும் 13 ஆம் திகதியே இலங்கை வருவார் என முன்னதாக […]

error: Content is protected !!