ரஷ்ய கடற்கரையைத் ட்ரோட் மூலம் தாக்கிய உக்ரேன்; ரஷ்ய வீரர் உட்பட மூவர் பலி
ரஷ்யாவின் குர்ஸ்க் கடற்கரையை உக்ரேன் தாக்கியதில் ரஷ்ய பாதுகாப்புப் படை வீரர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர், ஏழு பேர் காயமடைந்தனர் என்று வட்டார ஆளுநர் அலெக்சாண்டர் கின்ஷ்டீன் புதன்கிழமை தெரிவித்தார். டெலிகிராமில் வெளியிட்ட தகவலில், உக்ரேனின் எல்லையோரமாக குடும்பங்கள் அடிக்கடி வந்து செல்லும் பகுதியில் இந்தத் தாக்குதலை உக்ரேன் வேண்டுமென்றே நடத்தியதாக அவர் கூறினார். “காயமடைந்த ஐந்து வயது குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்தவர்களில் தேசியப் பாதுகாப்புப் படை வீரரும் ஒருவர். […]













