2 ஏக்கரில் கஞ்சா- 36,710 செடிகள் அழிப்பு: மூவர் கைது
இலங்கையில் ஊவா மாகாணம், மொனராகலை, ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவ்ஆர பகுதியில் சுமார் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த 36,710 கஞ்சா செடிகள் சுற்றிவளைப்பின்போது அழிக்கப்பட்டுள்ளதுடன், மூன்று சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவத்தின் தகவலின்படி, இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலையடுத்து, மொனராகலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, ஆறு முதல் எட்டு அடி உயரம் வரை வளர்ந்திருந்த கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட 36,710 கஞ்சா செடிகளும் வேருடன் பிடுங்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே தீயிட்டு அழிக்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக ஹம்பேகமுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.




