இந்தியா செய்தி

இந்திய விமானப்படையின் போர் ஆற்றலை மேம்படுத்த வியூகம்

இந்திய விமானப்படையின் போர் ஆற்றலை மேம்படுத்த வியூகம்

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய விமானப்படையின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைமைத் தளபதி ஏர் சீப் மார்ஷல் அசுதோஷ் தீக்சித்தை திங்கட்கிழமை (2) சந்தித்து, அவரது புதிய பொறுப்புக்காக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள ராஜ்நாத் சிங், அசுதோஷ் தீக்சித் சிறந்த தலைமைத்துவப் பண்புகளைக் கொண்ட திறமையான விமானப்படை அதிகாரி எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரது புதிய பதவிக்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப்படையின் 29ஆவது தலைமைத் தளபதியாக அசுதோஷ் தீக்சித் கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி பொறுப்பேற்றார். 42 ஆண்டுகள் சேவையாற்றிய பின்னர் ஓய்வுபெற்ற ஏர் சீப் மார்ஷல் ஏ.பி. சிங்குக்குப் பதிலாக அவர் இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார்.

தேசிய பாதுகாப்புப் படைக் கல்லூரியின் முன்னாள் மாணவரான அசுதோஷ் தீக்சித், 1986ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் திகதி இந்திய விமானப்படையின் போர் விமானப் பிரிவில் இணைந்தார்.

நான்கு தசாப்தங்களுக்கும் மேலான சேவைக் காலத்தில், விமானப்படை நடவடிக்கைகள், விமானச் சோதனைகள், பாதுகாப்புத் திறன் மேம்பாடு மற்றும் முப்படைகளின் ஒருங்கிணைந்த பணிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுபவம் பெற்றுள்ளார்.

மேலும், இந்திய விமானப்படையின் போர் தயார் நிலையை வலுப்படுத்துதல், உள்நாட்டுப் பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் மற்றும் முப்படைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை அதிகரித்தல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி