உலகம் செய்தி முக்கிய செய்திகள்

வளைகுடாவை போர்க்களமாக்க வேண்டாம்: வல்லரசுகளுக்கு சீனா எச்சரிக்கை

வளைகுடா பிராந்தியம் புவிசார் அரசியல் மோதல்களுக்கும் வல்லரசுகளின் போட்டிக்கும் களமாக மாறக்கூடாது என்றும், மத்திய கிழக்கில் நீடித்த அமைதியை ஏற்படுத்த அரபு நாடுகளுடன் இணைந்து செயற்பட சீனா தயாராக இருப்பதாகவும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

வளைகுடா பிராந்தியம் புவிசார் அரசியல் மோதல்களுக்கும் வல்லரசுகளின் போட்டிக்கும் களமாக மாறக்கூடாது என்றும், மத்திய கிழக்கில் நீடித்த அமைதியை ஏற்படுத்த அரபு நாடுகளுடன் இணைந்து செயற்பட சீனா தயாராக இருப்பதாகவும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

ஓமான் சுல்தான் ஹைதம் பின் தாரிக் உடனான திங்கட்கிழமை சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உலகம் ஒரு நூற்றாண்டில் காணப்படாத ஆழமான மாற்றங்களைச் சந்தித்து வருவதாகக் குறிப்பிட்ட ஷி ஜின்பிங், மத்திய கிழக்கு வளைகுடா பிராந்தியம் வல்லரசுகளின் போட்டிக்கும் புவிசார் அரசியல் மோதல்களுக்கும் அரங்காக மாறக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

அந்தப் பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்டுவதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படுவதுடன், அவற்றைப் பாதுகாக்கவும் வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போரைக் கட்டுப்படுத்துவதற்கு சீனா தொடர்ச்சியாக முயற்சித்து வருவதாகவும், பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதில் தனது பங்களிப்பை வழங்க விரும்புவதாகவும் ஷி ஜின்பிங் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஓமான் சுல்தான் ஹைதம் பின் தாரிக், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக ஞாயிற்றுக்கிழமை சீனாவைச் சென்றடைந்தார்.

1978ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்ட பின்னர், ஓமான் அரச தலைவர் ஒருவர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.

மத்திய கிழக்கு தொடர்பான முக்கிய விவகாரங்களில் சீனா எடுத்துவரும் நிலைப்பாடுகளுக்கு தனது அரசாங்கம் ஆழ்ந்த மதிப்பளிப்பதாக, சீன ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது ஓமான் சுல்தான் தெரிவித்துள்ளார் என ஓமான் அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி