ஐரோப்பா

ரஷ்யாவில் வலுவான நிலநடுக்கம் பதிவு : சுனாமி எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்!

  • July 20, 2025
  • 0 Comments

ரஷ்யாவின் கிழக்கு கம்சட்கா பிராந்தியத்தின் கடற்கரையில் இன்று (20) காலை ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக யூரோ-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 20 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ஆரம்பத்தில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

டிரம்புடனான மோதல் – திடீரென தொலைபேசி எண்ணை மாற்றிய எலான் மஸ்க்

  • July 20, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புடனான கருத்து மோதலுக்குப் பிறகு, எலான் மஸ்க் தனது தொலைபேசி எண்ணை மாற்றிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைத் தலைவர் மைக் ஜான்சன் இதனை தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், அரசு செலவினங்களைக் குறைக்கும் மசோதா தொடர்பாக எலான் மஸ்க்குக்கு குறுஞ்செய்தி அனுப்ப முயன்ற போது அவரது எண் மாற்றப்பட்டது தெரிய வந்ததாகத் கூறியுள்ளார். டிரம்ப் – மஸ்க் இடையே பிரச்னை விரைவில் சரியாகும் என்றும், டிரம்ப்பும் அதை […]

ஆஸ்திரேலியா செய்தி

சீனப் பயணத்தை ரத்து செய்துவிட்டு அமெரிக்கா சென்றதாக ஆஸ்திரேலிய பிரதமர் மீது குற்றச்சாட்டு

  • July 20, 2025
  • 0 Comments

அந்தோணி அல்பானீஸ் தனது சீனப் பயணத்தை ரத்து செய்துவிட்டு அமெரிக்கா சென்று டொனால்ட் டிரம்பை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். முன்னாள் உள்துறை அமைச்சர் மைக் பெசுல்லோ ஒரு செய்தியாளர் கூட்டத்தில், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சீன உறவுகளை ஆஸ்திரேலியா ஒரு முக்கியமான படியாகக் கூறி வந்தாலும், ஆஸ்திரேலியாவிற்கான மிக முக்கியமான வெளியுறவுக் கொள்கை பிரச்சினைகள் டிரம்புடன் விவாதிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் கூறினார். டிரம்பை சந்திப்பதற்கு முன்பு பிரதமரின் இரண்டாவது அதிகாரப்பூர்வ வருகையை சீனாவிற்கு முன்னுரிமை அளித்து […]

வாழ்வியல்

இரவு குறைந்த நேரம் தூங்குவது கிட்டப் பார்வையை ஏற்படுத்தும் அபாயம்

  • July 20, 2025
  • 0 Comments

இரவில் குறைந்த நேரம் தூங்குவதாலோ அல்லது சரியாக தூங்காததாலோ பிள்ளைகளுக்கு கிட்டப் பார்வை ( Myopia ) ஏற்படலாம் என்று அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் பிள்ளைகளின் தூக்கம் குறித்து சிந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு சிறு வயதில் ஏற்படும் கிட்டப் பார்வை குறித்து பொதுவாக யாரும் கண்டு கொள்வதில்லை. கிட்டப் பார்வைதானே என்று அலட்சியமாக நினைக்கிறார்கள். சிலர் கண்ணாடி போட்டால் சரியாகிவிடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் குழந்தைக்கு சிறு வயதிலேயே ஏற்படும் கிட்டப் பார்வைதான் […]

செய்தி

100 ஆண்டில் ஒருமுறை நிகழும் வானியல் அதிசயம் – 6 நிமிடங்கள் இருளில் மூழ்கும் உலகம்

  • July 20, 2025
  • 0 Comments

உலகம் 100 ஆண்டுகளில் ஒருமுறை ஏற்படும் மிக நீளமான சூரிய கிரகணத்தை அனுபவிக்க தயாராகி வருகின்றது. 2027ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 2ஆம் திகதியன்று, சூரிய கிரகணம் நிகழ்ந்துள்ள போது, உலகம் 6 நிமிடங்கள் 23 வினாடிகள் முழுமையாக இருட்டில் மூழ்கும் வாய்ப்பு உள்ளது. இந்த கிரகணம், அதன் நீளத்தினால் உலகெங்கிலும் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கிரகணத்தின் “path of totality” (முழுமையான கிரகணம் நடைபெறும் பாதை) கீழ்க்கண்ட நாடுகளில் முழுமையாக காணப்படும்: ஸ்பெயின் எகிப்து […]

அறிவியல் & தொழில்நுட்பம்

இணையத்தில் கசிந்த கூகுள் பிக்சல் 10 சீரிஸ் விபரங்கள்

  • July 20, 2025
  • 0 Comments

கூகுளின் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன்களான பிக்சல் 10 சீரிஸ் விரைவில் அறிமுகமாகும் என்று கடந்த சில வாரங்களாக வதந்திகள் தீயாய் பரவி வரும் நிலையில், தற்போது அவற்றின் விலை விவரங்கள் மற்றும் சில முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் வெளியீடு நடைபெறும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படும் இந்த தொடரில், பிக்சல் 10, பிக்சல் 10 ப்ரோ, ப்ரோ எக்ஸ்எல் மற்றும் ப்ரோ ஃபோல்டு என பல்வேறு மாடல்கள் இடம்பெறும் என்று […]

ஆசியா

அருணாசலுக்கு அருகே உலகின் மிகப்பெரிய அணை கட்டுமானம் பணியை தொடங்கிய சீனா

  • July 20, 2025
  • 0 Comments

திபெத்திற்கான இந்திய எல்லையான அருணாசல பிரதேசத்துக்கு அருகே, பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா உலகின் மிகப்பெரிய அணையின் கட்டுமானப் பணிகளை தொடங்கியது. சீன பிரதமா் லி கியாங் நியிங்ஜி நகரில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார். இந்த அணை திட்டம் கடந்த டிசம்பர் மாதத்தில் அங்கீகரிக்கப்பட்டு, தற்போது நடைமுறையில் உள்ளது. இந்த மாபெரும் அணை, 16,780 கோடி டாலர் (ரூ.14.46 லட்சம் கோடி) மதிப்பிலான திட்டமாக, 5 அடுக்கு நீர் மின்நிலையங்களுடன் அமைக்கப்படுகின்றது. ஆண்டுக்கு […]

செய்தி

இலங்கையில் கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரிப்பு

  • July 20, 2025
  • 0 Comments

கண்டி – உடதும்பர, மீமுரே பகுதியில் சிற்றூர்தி ஒன்று பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. படுகாயமடைந்த மற்றுமொரு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்படி குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் சம்பவத்தில் காயமடைந்த மேலும் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக தெல்தெனிய மருத்துவமனையிலிருந்து பேராதெனிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வாகனம் நேற்றிரவு கண்டி, உடுதும்பர-மீமுரே பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

இலங்கை பாடசாலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் – பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

  • July 20, 2025
  • 0 Comments

ஒரு பாடசாலை வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை 25-30 ஆகக் குறைப்பது ஒரு இலக்காகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஒரு வகுப்பறையில் 50-60 மாணவர்களுடன் தரமான கல்வியை வழங்க முடியாது என்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். காலி, தக்ஷினபாய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பிரதமர் இதனைத் தெரிவித்தார். புதிய கல்வி மறுசீரமைப்புகள் குறித்து மாகாண அதிகாரிகளுக்கு அறிவூட்டும் நான்காவது நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மேலும் கூறியதாவது: “கல்வி மறுசீரமைப்புக்காக நீங்கள் […]

விளையாட்டு

ஷுப்மன் கில்லுக்கு உண்மையான சோதனை இனிதான் – கிரேக் சேப்பல்

  • July 20, 2025
  • 0 Comments

இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு உண்மையான சோதனை மான்செஸ்டர் டெஸ்ட்டிலிருந்து தொடங்கவுள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் தெரிவித்துள்ளார். இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி அண்மையில் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது. இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த போட்டி மான்செஸ்டரில் வருகிற ஜூலை 23 […]