இலங்கை

சிறப்பு அதிரடிப்படையினருக்காக (STF) புதிய வாகனங்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை ஒப்புதல்!

  • November 4, 2025
  • 0 Comments

சிறப்பு அதிரடிப்படைக்கு (STF) 125cc எஞ்சின் திறன் கொண்ட 100 மோட்டார் சைக்கிள்களையும் 50 முச்சக்கர வண்டிகளையும் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. சிறப்பு அதிரடிப்படை முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில்  76 பிரதான முகாம்கள், 23 துணை முகாம்கள் மற்றும் 14 சிறப்பு பிரிவுகளை இயக்குகிறது. இந்நிலையில் அவர்களின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக 314 மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றுள்ள 90  சதவீதமானவை  10 ஆண்டுகளுக்கும் மேலானவை என்றும் அவற்றில் சிலவற்றில் தொழில்நுட்ப குறைப்பாடுகள் […]

பொழுதுபோக்கு

இராஜராஜ சோழனாக அஜித்! அடுத்த வரலாற்று சம்பவம் லோடிங்…

  • November 4, 2025
  • 0 Comments

இல்லாத ஒன்றை இருப்பது போல் காட்டுவது தற்போதைய காலக்கட்டத்தில் சாதாரண ஒரு விடயமாகி விட்டது. அதுவும் இறந்தவர்களை மீண்டும் இருப்பதுபோல் காட்டுவது தொழில்நுட்பத்தின், விஞ்ஞான உலகின் அதி உச்சம் என்றும் கூறலாம். இப்படித்தான் கடந்த நாட்களில் நடிகர்களின் AI புகைப்படங்கள் வெளியாகின. இதில் நடிகர் அஜித்தின் இராஜராஜ சோழன் படங்கள் செம்ம வைரலாகின. இது உண்மையாகாதா என்று எண்ணுவோர் ஏராளம் பேர் இருக்கின்றனர். அஜித்தின் தோற்றமும், அழகும், நடையும் ஒரு ராஜாவுக்கு நிகராகவே இருக்கும். இது இயக்குனர் […]

உலகம்

நேபாளத்தில் மலையேற்றத்தில் ஈடுபட்ட 07 பேர் உயிரிழப்பு – சிக்கலுடன் தொடரும் மீட்புபணி!

  • November 4, 2025
  • 0 Comments

நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கி  07 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஐந்து வெளிநாட்டினர் மற்றும் இரண்டு நேபாளிகள் இருப்பதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. டோலகா (Dolakha district) மாவட்டத்தில் உள்ள யாலுங் ரி மலையின் (Yalung Ri) அடிப்படை முகாமுக்கு அருகில் நேற்று இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் இரண்டு இத்தாலியர்கள், ஒரு கனேடியர், ஜேர்மன் மற்றும் பிரான்ஸை சேர்ந்த இரண்டுபேர் இருப்பதாகவும், மீதம் இருந்த இருவர் பயண வழிக்காட்டியாக செயற்பட்ட நேபாளியர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மீட்பு […]

பொழுதுபோக்கு

“ஜெய்லர்-2″ நிறைவு… சென்னை வந்தார் ரஜினி

  • November 4, 2025
  • 0 Comments

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெய்லர் தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வரலாற்று சாதனையை படைத்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இந்தக் கூட்டணி “ஜெய்லர்-2″ க்காக இணைந்துள்ளது. ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்புகள் சமீபகாலமாக கோவாவில் நடைபெற்றன. இப்போது கோவாவுடன் தொடர்புடைய காட்சிகள் நிறைவடைந்துள்ளன. இதனை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார் ரஜினிகாந்த். அடுத்தகட்ட படப்பிடிப்புகள் இந்தியாவின் பல இடங்களில் நடைபெறும் என சொல்லப்படுகிறது. இந்த பாகத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு […]

இலங்கை

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச்சூடு – வர்த்தகர் மரணம்!

  • November 4, 2025
  • 0 Comments

அம்பலாங்கொடை நகர சபை வளாகத்திற்கு அருகில் இன்று (4) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில்  வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 55 வயதான நிலந்த வருஷ விதான என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். காரில் வந்த சந்தேக நபர்கள் குழு துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட நிலையில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. பின்னர் படுகாயம் அடைந்த வர்த்தகர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காவல்துறை விசாரணைகளில், பாதிக்கப்பட்டவர் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் […]

உலகம் செய்தி

பாதுகாப்பு செலவீனங்களை மும்மடங்காக அதிகரிக்கும் தென்கொரியா!

  • November 4, 2025
  • 0 Comments

தென்கொரியாவில் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவதற்கான நிதியை மூன்று மடங்கு அதிகரிக்க வேண்டும் என அந்நாட்டு ஜனாதிபதி லீ ஜே மியுங் ( Lee Jae Myung) தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு பாதுகாப்பு செலவினங்களில் திட்டமிடப்பட்ட 8.2% அதிகரிப்புக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரையை இன்று ஆற்றிய  அவர் இந்த கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். பாதுகாப்பு செலவீனங்களை அதிகரிப்பது […]

இலங்கை

போதைப்பொருள் மாபியாக்களுக்கு முடிவு கட்டும் நடவடிக்கை ஆரம்பம் – வடக்கு மக்களுக்கு அழைப்பு!

  • November 4, 2025
  • 0 Comments

போதைப்பொருளுக்கு முடிவு கட்டுவதற்குரிய சமர் ஆரம்பமாகியுள்ளது. இந்த சமரைக் கண்டு அஞ்ச வேண்டாம். அதற்குப் பேராதரவு தாருங்கள். வடக்கு மண்ணில் இருந்து போதைப்பொருள் மாபியாக்கள் உட்பட குற்றச் செயல்களில் ஈடுபடும் தரப்புகளைத் துடைத்தெறிவோம் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு: “போதைப்பொருள் விற்பனையாளர்கள், கஞ்சா கடத்துபவர்கள் மற்றும் […]

இலங்கை

கனடாவில் இருந்து செல்வம் அடைக்கலநாதன் எம்.பிக்கு வந்த கொலை மிரட்டல்

  • November 4, 2025
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் காவல்துறையில் இன்று முறைப்பாடு அளித்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டில் கனடாவில் வசிக்கும் ஒருவர் தொலைபேசியில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக  தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

அறிவியல் & தொழில்நுட்பம்

மோசடிகளால் அதிகம் பாதிக்கப்படும் ஐபோன் பயனர்கள் – ஆய்வில் தகவல்

  • November 4, 2025
  • 0 Comments

ஆண்ட்ராய்டு (Android) கையடக்கத் தொலைபேசி பயனர்கள் மோசடிகளால் பாதிக்கப்படுவது 58 சதவீதம் குறைவாக இருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. மோசடி மற்றும் ஸ்பேம் (Spam) குறுஞ்செய்திகளால் ஐபோன்களை விட இந்த குறைவு காணப்படுவதாக கூகிள் நிறுவனத்தால் YouGov என்ற நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய மூன்று நாடுகளில் உள்ள 5,000க்கும் அதிகமான கையடக்கத் தொலைபேசி பயனர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த ஆய்வின் முடிவில் ஒரு வாரத்தில் 3 அல்லது […]

இலங்கை

நுகேகொடை கூட்டம் – நாமல், ரணில் கருத்து மோதலா?

  • November 4, 2025
  • 0 Comments

நுகேகொடை கூட்டம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், நாமல் ராஜபக்சவிற்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் தகவலை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி நிராகரித்துள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்கத்துக்கு எதிரான பேரணியில் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கக் கூடாது எனவும், மாறாக அவர் பங்கேற்றால் தான் வரப்போவதில்லை எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார் என தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்தே, குறித்த கூட்டத்துக்கு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அழைப்பு இல்லை என […]