கருத்து & பகுப்பாய்வு

அண்டார்டிகாவில் வேகமாக உருகும் பனிப்பாறை – ஏற்படவுள்ள பேராபத்து

  • November 6, 2025
  • 0 Comments

அண்டார்டிகாவில் உள்ள ஹெக்டோரியா பனிப்பாறை (Hectoria Glacier), இரண்டு மாதங்களில் சுமார் 50 சதவீதம் உருகியுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது வரலாற்றில் மிக வேகமாக நிகழ்ந்த உருகும் செயல்பாடாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆய்வை அமெரிக்காவின் கொலராடோ போல்டர் பல்கலைக்கழகத்தின் மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானி டெட் ஸ்காம்போஸ் (Ted Scambos) மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்டனர். பனிப்பாறையின் அழிவை, வியக்கத்தக்க மற்றும் மிகவும் அசாதாரண வேகத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்வு என டெட் ஸ்காம்போஸ் வர்ணித்துள்ளார். பெரிய […]

உலகம்

விண்வெளியில் அதிரடி காட்டத் தயாராகும் நியூசிலாந்து

  • November 6, 2025
  • 0 Comments

விண்வெளியில் செயற்கைக்கோள்களைச் செலுத்தும் பாரிய திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாக நியூசிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. பெரிய அளவில் விண்வெளியில் செயல்படும் விரிவான திட்டங்கள் ஆராயப்படுவதாக, பசிபிக் பிராந்தியத்தின் நியூசிலாந்து விண்வெளித் துறை அமைச்சர் ஜூடித் கொலின்ஸ் (Judith Collins) தெரிவித்துள்ளார். AFP ஊடக நிறுவனத்துடன் இடம்பெற்ற சந்திப்பின்போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். பல செயற்கைக்கோள்களை விண்வெளியில் செலுத்தி, தேசிய நலன்சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதே நியூசிலாந்தின் முக்கியக் குறிக்கோளாகும். இது குறித்து பல ஆண்டுகளாக நியூசிலாந்து அரசாங்கம் முயற்சித்து வருகிறது. சட்டவிரோத […]

இந்தியா

திருவண்ணாமலை ஆலயத்தில் 103 தங்க நாணயங்கள் கண்டுபிடிப்பு! தீவிர சோதனையில் அதிகாரிகள்

  • November 6, 2025
  • 0 Comments

தமிழ்நாட்டின் திருவண்ணாமலை பகுதியில் உள்ள பழமையான ஆலயத்தில் 103 தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆலயத்தில் மறுசீரமைப்புப் பணிகள் நடந்தபோது, ஒரு மண்பானையில் 103 தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக NDTV ஊடகம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலயம், மூன்றாம் ராஜராஜ சோழன் வாழ்ந்த 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த நிலையில், அண்மையில் கோயிலில் மறுசீரமைப்புப் பணிகள் நடந்தன. இதன்போது, ஒரு மண்பானையில் நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. மண்பானையில் இருந்த நாணயங்களைக் கண்ட ஆலய நிர்வாகம், உடனடியாக […]

உலகம் செய்தி

சீனாவில் 30 வருடங்களான முன்னாள் காதலியை தேடும் காதலன்! கடனை கொடுக்க திண்டாட்டம்

  • November 6, 2025
  • 0 Comments

சீனாவில் லீ (Li) என்ற நபர் ஒருவர் தனது முன்னாள் காதலியிடம் பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதற்காக அவரை தேடி வருகிறார். கடனை கொடுத்த முன்னாள் காதலியான மாவை (Ma), அவரது முன்னாள் காதலன் லீ (Li) என்பவர் தேடி வருவதாக South China Morning Post நிறுவனம் தெரிவித்துள்ளது. 1991ஆம் ஆண்டு இருவரும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய போது, காதல் உறவு ஏற்பட்டுள்ளது. சுமார் 8 வருடங்கள் நீடித்த அவர்களின் காதல் உறவு, குடும்ப சூழ்நிலை […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் தங்க நாணயத்திற்கு காத்திருந்த பெண் – பொதியில் கிடைத்த பழைய வெள்ளரிக்காய்

  • November 6, 2025
  • 0 Comments

ஜெர்மனியின் பவேரியா (Bavaria) மாநிலத்தின் பிர்க்லாண்டைச் சேர்ந்த ஒரு பெண், இணைய மோசடியில் 3,300 யூரோக்களை இழந்துள்ளார். குறித்த பெண், ஒரு வலைத்தளத்தில் விற்பனைக்காக விளம்பரப்படுத்தப்பட்ட தங்க நாணயத்தை வாங்க முயற்சித்தபோது, இறுதியில் ஒரு பழைய வெள்ளரிக்காயையே பெற்றுள்ளார். மோசடியைத் தவிர்க்க, விநியோகத்தின் பின்னர் பணம் செலுத்தும் முறையை அவர் தேர்வு செய்தார். மேலும், பணம் செலுத்துவதற்கு முன்பு பொதியைச் சரிபார்க்கவும் அவர் திட்டமிட்டிருந்தார். எனினும், பொதி வந்தபோது, அந்தப் பெண் வீட்டில் இருக்கவில்லை. அவரது தந்தை […]

உலகம் செய்தி

நான் பதவியில் இருக்கும் வரை சீனா தைவானை தாக்காது – ட்ரம்ப் பகிரங்க அறிவிப்பு

  • November 6, 2025
  • 0 Comments

தான் பதவியில் இருக்கும் காலம் வரை தைவானுக்கு எதிராகச் சீனா இராணுவ நடவடிக்கை எடுக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார். அத்தகைய நடவடிக்கை நடந்தால் அமெரிக்கா எவ்வாறு எதிர்வினையாற்றும் என்பதை சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் (Xi Jinping) புரிந்துகொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். ட்ரம்ப் வியாழக்கிழமை தென் கொரியாவில் சீன ஜனாதிபதியைச் சந்தித்தார். பேச்சுவார்த்தையின் போது தைவான் (Taiwan) பற்றி விவாதிக்கப்படவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி பின்னர் தெரிவித்தார். சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு […]

உலகம் செய்தி

கிழக்கு ஜெருசலேம் அருகே தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இஸ்ரேலியப் படை

  • November 5, 2025
  • 0 Comments

கிழக்கு ஜெருசலேமுக்கு(Jerusalem) வடக்கே உள்ள அர்-ராம்(Ar-Ram) நகரில் இஸ்ரேலியப் படைகளால் ஒரு பாலஸ்தீனிய நபர் சுட்டுக் காயமடைந்ததாக பாலஸ்தீனிய ரெட் கிரசண்ட்(PRCS) அமைப்பு தெரிவித்துள்ளது. எல்லை அருகில் இஸ்ரேலியப் படைகள் ஒரு தொழிலாளர் குழுவைத் துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அவர்களில் ஒருவர் காயமடைந்ததாகவும் வஃபா(Wafa) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனிய பொது தொழிற்சங்க கூட்டமைப்பின் கூற்றுப்படி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இஸ்ரேலியப் படைகளால் 15 பாலஸ்தீனிய தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் […]

இலங்கை செய்தி

இலங்கை: பல்லேகலேயில் தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து

  • November 5, 2025
  • 0 Comments

கண்டி, பல்லேகலேயில்(Pallekele) உள்ள ஒரு தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து தொழிற்சாலையின் தீப்பெட்டி சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒரு கிடங்கில் தொடங்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேதத்தின் அளவு குறித்து பல்லேகலே காவல்துறையினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உலகம் செய்தி

குழந்தைகளுக்கான சமூக ஊடகத் தடையில் மேலும் இரண்டு செயலிகளை சேர்த்த ஆஸ்திரேலியா

  • November 5, 2025
  • 0 Comments

அடுத்த மாதம் தொடங்கும் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆஸ்திரேலியாவின் உலகின் முதல் சமூக ஊடகத் தடையில் மேலும் இரண்டு செயலிகள்(Apps) சேர்க்கப்பட்டுள்ளது. நேரடி ஒளிபரப்பு தளமான கிக்(Kick) மற்றும் விவாத செயலி ரெடிட்(Reddit) ஆகியவை தற்போது சேர்க்கப்பட்டு தடை செய்யப்பட்ட தளங்களின் எண்ணிக்கை ஒன்பது ஆகக் உயர்ந்துள்ளது. அவற்றில் பேஸ்புக்(Facebook), எக்ஸ்(X), ஸ்னாப்சாட்(Snapchat), டிக்டோக்(TikTok), யூடியூப்(YouTube), இன்ஸ்டாகிராம்(Instagram) மற்றும் திரேட்ஸ்(Threads) ஆகியவை அடங்கும். இந்நிலையில், வேகமாக மாறி வரும் தொழில்நுட்பத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு வரும் காலங்களில் […]

இலங்கை செய்தி

தெதுறு ஓயா ஆற்றில் மூழ்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு

  • November 5, 2025
  • 0 Comments

தெதுறு ஓயாவில் மூழ்கி மீட்கப்பட்ட இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதன்படி, இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. கிரிபத்கொடவிலிருந்து சிலாபத்திற்கு சுற்றுலாவிற்காக வந்த பத்து பேர் கொண்ட குழு தெதுரு ஓயாவில் குளிக்கும் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது ஆரம்பத்தில் நான்கு பேர் மட்டுமே உயிரிழந்த நிலையில் தற்போது ஒருவர் சிகிச்சை பலனின்றி சிலாபம் பொது மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். தொடர்புடைய செய்தி நான்கு உயிர்கள் […]