இலங்கை

வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகள் – இலங்கைக்கு இடமில்லை

  • November 7, 2025
  • 0 Comments

வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்த பட்டியலில் முதல் 30 நாடுகள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த பட்டியலை உலக புள்ளிவிபர நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி கணிப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பட்டியலில் தென் சூடான் முன்னிலையில் உள்ளது. அந்த நாடு 24.3 சதவீதம் வளர்ச்சி வீதத்தைப் பெற்றுள்ளது. தென் சூடானை அடுத்து […]

உலகம் செய்தி

ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் வெடித்த பவர் பேங்கால் பரபரப்பு

  • November 7, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் விமான நிலையங்களில் ஒன்றில் பவர் பேங்க் வெடித்ததின் காரணமாக ஒருவர் காயமடைந்துள்ளார். மெல்போர்ன் விமான நிலையத்தில் உள்ள குவாண்டாஸ் வணிக பகுதியில் இருந்த நபர் ஒருவனே காயமடைந்துள்ளார். குறித்த பவர் பேங்கை தனிப்பட்ட முறையில் வைத்திருந்த நிலையில், அது வெடித்தது. இதன் காரணமாக விரல்கள் மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தின் போது சுமார் 150 பேர் அந்தப் பகுதியில் அமர்ந்திருந்ததாகவும், அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் விமான […]

வாழ்வியல்

தூக்கமின்மை பாதிப்புக்கு மாத்திரை பயன்படுத்துபவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து

  • November 7, 2025
  • 0 Comments

தூக்கமின்மை பாதிப்புக்காக பொதுவாக பரிந்துரைக்கப்படும் மெலடோனின் மாத்திரைகளை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் நாள்பட்ட தூக்கமின்மை மற்றும் இதயச் செயலிழப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உயிரிழப்புக்கான ஆபத்தும், நீண்டநாள் உடல் பாதிப்புகள் ஏற்படக்கூடிய வாய்ப்பும் அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. தூக்கமின்மை பாதிப்பால் அவதிப்படுபவர்களில், மெலடோனின் சப்ளிமெண்ட் பயன்படுத்தாதவர்களைவிட, அதைப் பயன்படுத்துபவர்களுக்கு ஐந்து […]

அரசியல் இலங்கை

வரவு- செலவுத் திட்டம் தொடர்பில் கடுமையான தீர்மானம் – தமிழரசு கட்சி எச்சரிக்கை

  • November 7, 2025
  • 0 Comments

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு உட்பட தமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, வரவு- செலவுத் திட்டம் தொடர்பில் கடுமையான தீர்மானமொன்று எடுக்கப்படும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் பேச்சு நடத்துவதற்கு நேரம் கோரி இருந்தோம். கடந்த ஜுலை மாதம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும் அதற்குரிய பதில் ஜனாதிபதி தரப்பில் இருந்து இன்னும் வழங்கப்படவில்லை […]

இலங்கை

வரவு – செலவுத் திட்டம்!! நம்பிக்கை இல்லை என்கிறார் சாணக்கியன் எம்.பி

  • November 7, 2025
  • 0 Comments

வரவு – செலவுத் திட்டம் ஊடாக நாட்டில் பாரிய மாற்றம் ஏற்படும் என நம்பமுடியாத சூழ்நிலையே காணப்படுகின்றது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2ஆவது வரவு- செலவுத் திட்டம் இன்று முன்வைக்கப்படவுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “ தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பல வாக்குறுதிகளை வழங்கியது. சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில் இருந்து விலகுவோம் எனவும் சூளுரைத்திருந்தது. […]

உலகம்

கனடாவில் இலங்கை குடும்பம் கொலை – குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞர்

  • November 7, 2025
  • 0 Comments

கனடா – ஒட்டாவாவில் கடந்த வருடம் இலங்கை குடும்பத்தை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 06 ஆம் திகதி இலங்கையைச் சேர்ந்த குடும்பம் ஒன்றின் தாய், நான்கு பிள்ளைகள் மற்றும் அவர்களின் நண்பர் உள்ளிட்ட ஆறு பேர் குத்திக் கொலை செய்யப்பட்டனர். இந்த நிலையில், ஒட்டாவா நீதிமன்றத்தில் குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது, தம்மீது சுமத்தப்பட்ட […]

செய்தி

சீனாவில் திருமணமான பெண்களை இலக்கு வைக்கும் விமான சேவை நிறுவனம்

  • November 7, 2025
  • 0 Comments

சீனாவில் திருமணமான பெண்களையும், அவர்களின் தாய்மாரையும் விமானப் பணிப்பெண்களாக இணைத்துக் கொள்ளவுள்ளதாக ஸ்பிரிங் ஏர்லைன்ஸ் (Spring Airlines) அறிவித்துள்ளது. “Air Aunties” என இந்த விமான சேவைக்கு பெயரிடப்பட்டுள்ளது. எனினும் இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பெண்களை அவமதிக்கும் வகையில் இவ்வாறான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், ஸ்பிரிங் ஏர்லைன்ஸ் நிறுவனம் அதனை மறுத்துள்ளது. “Air Aunties” என்ற பெயர் அவமரியாதையானது என்றும், குடும்பத்தினரைக் கவனித்துக் கொள்வது பெண்களின் பாரம்பரிய கடமை என்ற […]

உலகம்

கனடாவில் தீவிரமடையும் மோசடி சம்பவங்கள் – பொது மக்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை

  • November 7, 2025
  • 0 Comments

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் மோசடி சம்பவங்கள் பாரிய அளவில் அதிகரித்துள்ளதால், எச்சரிக்கையுடன் இருக்குமாறும் காவல்துறையினர் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். கடந்த சில வாரங்களில் இந்த மோசடிகள் தீவிரமடைந்துள்ளன. இந்த விடயத்தில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். அண்மையில், நோர்த் பே (North Bay) பகுதியில் வசிக்கும் ஒருவரிடமிருந்து 250,000 டொலர் பணமோசடி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், கடந்த சில வாரங்களில் கிரிப்டோகரன்சி மோசடிகள், இணைய சந்தை ஏமாற்றங்கள், காதல் மோசடிகள் மற்றும் […]

உலகம்

விண்வெளியில் தத்தளிக்கும் சீன விண்வெளி வீரர்கள்

  • November 7, 2025
  • 0 Comments

விண்வெளியில் சிக்கியுள்ள சீனாவைச் சேர்ந்த மூன்று விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விண்வெளி வீரர்கள் பயணித்த விண்கலத்தில் ஏற்பட்ட சேதங்கள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் விண்வெளிக்குச் சென்ற குறித்த வீரர்கள், ஏற்கனவே ஆறு மாதங்களுக்கு மேலாக விண்வெளியில் தங்கியுள்ளனர். சென் டொங் (Chen Dong), சென் ஸொங்ருய் (Chen Zhongrui), வாங் ஜியே (Wang Jie) ஆகிய மூவரும் நேற்றைய தினம் பூமிக்கு திரும்பத் தயாராக இருந்தனர். […]

உலகம் முக்கிய செய்திகள்

சமகால செயற்பாட்டால் அழியப்போகும் அமெரிக்கா! கொந்தளிக்கும் ட்ரம்ப்

  • November 7, 2025
  • 0 Comments

அமெரிக்க அரசாங்கம் 35 நாட்களாக முடங்கியுள்ளதற்கு ஜனநாயகக் கட்சியே காரணம் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க அரசாங்கம் இவ்வளவு காலம் முடங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவை அழிக்கும் முயற்சியில் ஜனநாயகக் கட்சி செயற்படுவதாக ட்ரம்ப் கடுமையாக சாடியுள்ளார். கடந்த செப்டம்பர் 30ஆம் திகதி முதல் நாடாளுமன்றம் நிதியளிக்க அனுமதி வழங்காமையினால் பல முக்கிய அமைச்சுகள் செயல்பாடுகளை நிறுத்தியுள்ளன. சுமார் 1.4 மில்லியன் அரசாங்க ஊழியர்கள் சம்பளம் இல்லாத நிலையில் வேலை […]